‘ஏற்றத்தாழ்வு அகல முயற்சி இரு மடங்காகவேண்டும்’

சிங்கப்பூரில் சமூக ஏற்றத்தாழ்வை அகற்ற முயற்சிகள் இரண்டு மடங்காகவேண்டும் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். ஒருவரின் பின்னணி எப்படி இருந்தாலும் அவரின் சொந்த முயற்சிகள், ஆற்றலின் அடிப்படை யில் ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட சமூகத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் இருப்பதை எப்படி உறுதிப்படுத்துவது என்பது நாட் டின் பொருளியல் உத்தியில் பிரிக்கமுடியாத ஓர் அங்கமாக இருக்கிறது என்று அவர் தெரி வித்துள்ளார்.

சிங்கப்பூரின் விலைமதிப்பு மிக்க சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் வாய்ப்பு களில் சமத்துவம் இல்லாத ஒரு நிலையை நாம் அனுமதித்துவிட முடியாது என்று அமைச்சர் மன் றத்தில் தெரிவித்தார். ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி உறுப்பினர் திருவாட்டி ஜெசிக்கா டான், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கோக் ஹெங் லியுன் ஆகியோர் உள்ளிட்ட உறுப்பினர் களுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், நாட்டின் பன்மய, பரந்த அடிப்படையிலான வளர்ச்சி, சிங் கப்பூரர்கள் தங்கள் விருப்பங் களை நிறைவேற்றிக்கொள்வதற் கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகக் கூறினார். எல்லா சிங்கப்பூரர்களும் வாழ்க்கையில் வெற்றியடைய உதவ இதுவே தலைசிறந்த வழி என்று வரவுசெலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைத்துப் பேசிய அமைச்சர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!