2020க்குள் ரயில் சேவைத் தடையைக் கட்டுப்படுத்த இலக்கு

வரும் 2020ஆம் ஆண்டுக்குள் மாதத்துக்கு ஒரு ரயில் சேவைத் தடைக்கு மேல் இருக்கக்கூடாது. அது தற்போதைய செயல்திறனைக் காட்டிலும் மும்மடங்கு சிறந்தது. இந்த வகையில் பயணிகள் நம்பிக் கையை மும்மடங்கு அதிகம் பெற எஸ்எம்ஆர்டி நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது. தனது வருடாந்திர மறுஆய்வு அறிக்கையை நேற்று வெளியிட்டுப் பேசிய அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு டெஸ் மண்ட் குவெக், "இது ஒரு தைரிய மான இலக்கு. இதை உலகில் உள்ள ஒரு சில ரயில் நிறுவனங் களால்தான் சாதிக்க முடியும்.

"சேவைத் தடையை ஐந்து நிமிடங்களுக் குக் குறைவாக வைத்திருப்பதும் ஆகக் கூடுத லாக 30 நிமிடங்களுக்கு மேல் சேவைத் தடை நீடிக்காமல் பார்த் துக்கொள்வதும் இலக்கு. 30 நிமி டங்களுக்கு மேல் நீடிக்கும் தடை கள் நிகழ்வதை நாம் அறவே தவிர்க்க வேண்டும்," என்றும் திரு குவெக் விவரித்தார். 30 நிமிடங்களுக்கு மேற்பட்ட ஒன்பது சேவைத் தடைகளை எஸ்எம்ஆர்டி நிறுவனம் கடந்த ஆண்டு சந்தித்தது.

சமிக்ஞை கோளாற்றையும் சேர்த்து பார்த்தால், வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு பாதை களில் அப்படிப்பட்ட 13 சேவை தடைகள் நிகழ்ந்தன. ஐந்து நிமிடங்களுக்கு மேற் பட்ட தடைகள் என்று பார்த்தால் மொத்தம் 140 தடைகள் கடந்த ஆண்டில் நிகழ்ந்தன. அவற்றில் சமிக்ஞை தொடர்பான தடைகளே ஆகஅதிகம் இடம்பெற்றிருந்தன.

"மறுசமிக்ஞை திட்டம் தொடர்பிலான தடைகள் தற்காலிகமா னவை என்பதால் அவற்றை இந்த நம்பிக்கை குறியீட்டு அறிக்கையில் சேர்த்துக்கொள்ளவில்லை," என் றும் திரு குவெக் கூறினார். சமிக்ஞை தொடர்பான தடை கள் நம்பிக்கை குறியீட்டு அறிக் கையில் பின்னர் சேர்த்துக்கொள் ளப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு எஸ்எம்ஆர்டி நிறுவனத் தலைவர் திரு சியா மூன் மிங், "வரும் ஜூன் மாதத்தில் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு பாதைகளில் புதிய மறுசமிக்ஞை முறை முழுமை யாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதால் ஜூன் மாத இறுதியிலி ருந்து அந்தத் தடைகளும் குறி யீட்டு அறிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படும்," என்று பதிலளித் தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!