சுடச் சுடச் செய்திகள்

மலேசிய தேர்தல்: வான் அசிசாவுடன் மோதும் பாஸ் கட்சி இளையர்

மலேசியாவின் 14வது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவ ரான டாக்டர் வான் அசிசாவுக்கு எதிராக பினாங்கு பாஸ் கட்சியின் இளையர் பிரிவு தலைவர் அஃப்னான் ஹமீமி தாயிப் அசாமுதீன் களமிறங்குகிறார். பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதிக் கட்சி (கெஅடிலான் ரக்யாட்) தலைவர் வான் அசிசா போட்டியிடுகிறார். அத்தொகுதியில் பாஸ் கட்சி சார்பில், கட்சியின் இளையர் பிரிவுத் தலைவர் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவான் அப்துல் ஹாடி அவாங் கட்சித் தலைமையகத்தில் நடந்த கூட்டமொன்றில் நேற்று அறிவித்தார்.

பாஸ் இளையர் பிரிவுத் தலை வரான 37 வயது அஃப்னான், முன்னாள் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் தாயிப் அசாமுதீன் முகம்மது தாயிப்பின் மகனாவார். தொழிலதிபரான இவர் இஸ்லாமிய மேம்பாட்டு நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.

பாஸ் கட்சியின் இளையர் பிரிவு தலைவர் அஃப்னான் ஹமீமி தாயிப் அசாமுதீன், மக்கள் நீதிக் கட்சி (கெஅடிலான் ரக்யாட்) தலைவர் வான் அசிசா. படம்: தி ஸ்டார்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon