பாரிஸ்: அல்ஜீரியாவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண், பிரெஞ்சு குடியுரிமை சான்றிதழ் பெறும் நிகழ்ச்சியின்போது அதிகாரிகளுடன் கைகுலுக்க மறுத்ததால் அவருக்கு அந்த குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டவர் ஒருவரை மணந்த அப்பெண் குடியுரிமை சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்திருந்தார். 2016ஆம் ஆண்டு குடியுரிமை சான்றிதழ் பெறச் சென்றிருந்த அந்தப் பெண் அந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அதிகாரியுடன் கைகுலுக்க மறுத்ததால் அவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது.
அதிகாரிகளுடன் கைகுலுக்குவது சமய நம்பிக்கைக்கு புறம்பானது என்று அப்பெண் வாதிட்டார். இருப்பினும் பிரெஞ்சு சமூகத்துடன் அவர் ஒருங்கிணையவில்லை என்பதையே அவரது செயல் காட்டுகிறது என்று அரசாங்கம் கூறியது. அந்தப் பெண்ணுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.