சுடச் சுடச் செய்திகள்

லிட்டில் இந்தியா வீட்டில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை புதிய தகவல்

லிட்டில் இந்தியா பகுதியிலுள்ள 8 சிங் அவென்யூ வீடு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்ததற்கு மின்சாரத்தால் இயங்கும் சைக்கிளுக்கு மின் னூட்டியதே காரணம் என சிங் கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தன் முதல்கட்ட விசாரணைக்குப் பின் ஃபேஸ்புக் வழி தெரி வித்துள்ளது. யாருக்கும் காயங்கள் ஏற்படாத அத்தீச்சம்பவத்தில் தீயை அணைக்கச் சுமார் இரண்டு மணி நேரமானது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வர ஏழு நீர்ப்பாய்ச்சு குழாய்கள் வீரர்களால் பயன்படுத் தப்பட்டன.

சுய நடமாட்டச் சாதனங்க ளுக்கு மின்னேற்றும்போது பாது காப்பைக் கருத்தில்கொள்ளவேண் டும் என்றும் மின்கலனுக்கு அளவுக்கு அதிகமாக மின்னேற் றுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களுக்கு நினை வூட்டியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஒன்பதாக இருந்த மின் ஸ்கூட்டர்கள் தொடர்பான தீச் சம்பவங்கள் கடந்த ஆண்டு நாற்பதாக உயர்ந்தன.

தீப்பிடித்ததற்குக் காரணம் என்று கூறப்படும் சைக்கிள் அடியோடு எரிந்து கருகியது. படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon