38வது திருமுறை மாநாடு இன்று துவக்கம்

சிங்கப்பூரில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் திருமுறை மாநாடு இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை வரை தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் திருமண மண்டபத்தில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது. சிறப்புப் பேச்சாளரான தமிழ் நாட்டைச் சேர்ந்த பனசை மூர்த்தி இன்று அம்பலவாணர் சிறப்புச் சொற்பொழிவாக 'குரு லிங்க சங்கம வழிபாடு' என்ற தலைப் பிலும் மற்ற இரு நாட்களில் முறையே 'மூர்த்தி, தலம், தீர்த்தம்', 'அவ்வுருவில் தோன்றி அருள் செய்வான்' என்ற தலைப்புகளிலும் பேச உள்ளார்.

டெப்போ ரோடு அருள்மிகு ருத்ர காளியம்மன் ஆலயத்தின் ஆதரவுடன் நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாட்டில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆங்கில இலக்கியப் பேராசிரியர் சித்ரா சங்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். மாநாடு தொடர்பாக முன்னரே நடைபெற்ற திருமுறைகள் ஓதும் போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி, மாறுவேடப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு கள் நாளை சனிக்கிழமையும் ஜூலை 22ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலையிலும் வழங்கப்படும்.

ஜூலை 22ம் தேதி ஞாயிறு காலை 9.00 மணிக்கு ஈசூன் அருள்மிகு புனிதமர பாலசுப்பிர மணியர் ஆலயத்தில் நடைபெறும் 63 நாயன்மார் குருபூசையைத் தொடர்ந்து இடம்பெறும் கேள்வி பதில் நேரத்தில் பனசை மூர்த்தி, முனைவர் சுப.திண்ணப்பன் ஆகி யோர் கலந்துகொள்வார்கள். சிங்கப்பூர் இந்து ஆலயங்களில் பணியாற்றும் எல்லா ஓதுவார்களும் ஒவ்வொரு மாலை நேரமும் பக்கவாத்தியக் கலைஞர்களின் துணையுடன் திருமுறைகளைப் பண்ணோடு ஓதிப் பரவசப் படுத்துவர். எல்லோரும் வரவேற் கப்படுகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!