சுடச் சுடச் செய்திகள்

லாரி மோதியது; மின்ஸ்கூட்டர் ஓட்டிய பெண் காயம்

செங்காங்கில் லாரி மோதியதால் மின்ஸ்கூட்டர் ஓட்டிய 34 வயது பெண் காயம் அடைந்தார். செங்காங் ஈஸ்ட் ரோடு, செங்காங் ஸ்குவேர் சந்திப்பில் நிகழ்ந்த விபத்து குறித்து நேற்று காலை 9.47 மணி அளவில் தகவல் வந்ததாக போலிசார் தெரிவித்தனர். போக்குவரத்து சந்திப்பில் மின்ஸ்கூட்டரை நிறுத்தி சாலையைக் கடப்பதற்காக அவர் காத்திருந்தார். அப்போது அவர் மீது லாரி மோதியது.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், பெண்ணின் கைகளிலும் கால்களிலும் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது என்றும் அவரால் நகர முடியவில்லை என்றும் சொன்னார். உடனே லாரியிலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ததாகவும் அவர் கூறினார். சுயநினைவுடன் இருந்த அந்தப் பெண் அருகிலுள்ள கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குப் பலத்த காயம் ஏற்படவில்லை என்று நம்பப்படுகிறது.

செங்காங்கில் நிகழ்ந்த விபத்து. படம்: லியன்ஹ வான்பாவ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon