சுடச் சுடச் செய்திகள்

‘ஜானி’ திரைப்படம் மூலம் திருப்புமுனைக்காக காத்திருக்கும் பிரசாந்த்

தியாகராஜன் தயாரிக்கும் புதிய படம் ‘ஜானி’. இதில் பிரசாந்த் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் வெற்றிச்செல்வன் இயக்கு கிறார். தொடக்கத்தில் தெலுங்கு நடிகை அனன்யா சோனியை நாயகியாக ஒப்பந்தம் செய்தனர். ஆனால் சில காரணங்களால் அவரை நீக்கிவிட்டு சஞ்சிதா ஷெட்டியை நாயகியாக்கி உள்ளனர். பிரபு, சாயாஜி ‌ஷிண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங் களை ஏற்றுள்ளனர். ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே ரஜினிகாந்த் படத்தின் தலைப்பை உரிய அனுமதி பெற்று இப்படத்துக்குச் சூட்டி உள்ளனர். இப்படம் தனக்குத் திரையுலகில் நல்லதொரு திருப்புமுனையாக அமையும் என்கிறார் பிரசாந்த்.