காய்கறியே என் இளமையின் ரகசியம்

என்றும் பதினாறு என்று கூறுவதுபோல் எப்போதுமே இளமையாகக் காட்சி தருகிறார் சதா. விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், இறைச்சி என எதுவும் சாப்பிடமாட்டேன். பால், இறைச்சி உற்பத்திக்காக மருந்துகள் அதிகம் சேர்க்கப்படுவதால் அவற்றை நான் தவிர்த்து வருகிறேன். அதேவேளையில் காய்கறி, சப்பாத்தி உள்ளிட்டவையே என் இளமையின் ரகசியமாக விளங்குகின்றன என்று கூறுகிறார் சதா.

'ஜெயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சதா. அஜித், விக்ரம் என முன்னணி நாயகர்களுடன் நடித்தவர். சில ஆண்டுகளாக போதிய வாய்ப்பில்லாமல் இருந்த இவர், தற்போது 'டார்ச்லைட்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். "டார்ச்லைட் படத்தில் 1980களில் நடப்பது போன்ற சம்பவங்கள் கதையாக சித்திரிக்கப்பட் டுள்ளன. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் குறித்த கதை. நான் இதுவரை, இம்மாதிரி துணிச்ச லான பாத்திரத்தில் நடிக்கவில்லை. ஆரம்பத்தில் இந்தக் கதையைச் சாதாரணமாகத்தான் நினைத் தேன். ஆனால், விருப்பமில்லாத தொழிலில் ஈடுபடும் பெண்களின் நிலையைப் படத்தில் பிரதிபலித்தது கஷ்டமாக இருந்தது.

"இதுபோன்ற தொழிலில் பெண்கள் ஈடுபடுவதற்கு காரணமே ஆண்கள்தான். பெண்கள் யாருமே விரும்பி அதில் ஈடுபடுவதில்லை. அரசு இத் தொழிலைச் சட்டபூர்வமாக்குவதைவிட இத்தொழிலுக்கான தேவையைக் குறைத்தாலே போதும். ஒவ்வொருவரும் இவ் விஷயத்தில் தங்கள் பொறுப்பை உணரவேண்டும். "எனக்கு ஏற்ற மாதிரி, நான் விரும்பும் வகையிலான நபர்கள் யாரும் என் வாழ்வில் வரவில்லை. அந்த மாதிரி நபரை சந்திக்கும்போது திருமணம் குறித்து யோசிக்கலாம். "அடுத்து இரண்டு கதைகள் வந்துள்ளன. நானே தயாரிக்கலாமா அல்லது வேறு யாராவது தயாரிப்பில் நடிக்கலாமா என யோசித்து வருகிறேன்," என்கிறார் சதா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!