சுகாதாரப் பராமரிப்பு: நீண்டகாலத் திட்டங்கள்

இந்திராணி ராஜா

நமது இளமைப் பருவத்தில், வாழ்க்கை முடிவில்லாதது போலவும், நாம் எப் போதும் ஆரோக்கியமாகவே இருப் போம் போலவும் நமக்குத் தோன்றும். ஆனால், வயது ஏற ஏற, சுகாதாரப் பராமரிப்புப் பிரச்சினைகள் எந்த சமயத்திலும் எழக்கூடிய நிலைமை ஏற்படும். அப்போதுதான், சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளைப் பற்றிய கவ லையும் எழுகிறது.

மக்கள்மீது அக்கறையுள்ள அரசாங் கம் என்ற முறையில், சிங்கப்பூரர்கள் அனைருக்கும் தரமான, கட்டுப்படி யாகும் சுகாதாரப் பராமரிப்பு தொடர்ந்து கிடைப்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். கடந்த சில ஆண்டு களாக, சுகாதாரப் பராமரிப்பு ஆதரவை யும் உயர்த்தயிருக்கிறோம். சுகா தாரப் பராமரிப்புக் கட்டுப்படியாவதைப் பின்வரும் வழிகளில் உறுதிப்படுத்தி வருகிறோம்: குறிப்பிடத்தக்க அளவிலான அர சாங்க மானியங்கள் - மருத்துவமனை கட்டணத்திற்கும் ஆரம்பகட்ட மற்றும் நீண்டகாலப் பராமரிப்புக்கும் 80% வரை. தனியார் மருந்தகங்களில் CHAS எனும் சமூக சுகாதார உதவி அட்டை பயன்படுத்தலாம். மூன்று வகையான "மெடி" திட்டங்கள் - மெடிசேவ், மெடி‌ஷீல்டு லைஃப் மற்றும் மெடிஃபண்ட். மெடிசேவ்: இதுதான் நமது மத்திய சேமநிதிக் கணக்கிலுள்ள சேமிப்பு. இந்தச் சேமிப்பைப் பயன்படுத்தி மருத் துவக் கட்டணங்களைச் செலுத் த லாம்.

மெடி‌ஷீல்டு லைஃப்: சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் அனைவருக்கும், வயது அல்லது உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், பெருந்தொகை யான மருத்துவமனை கட்டடணங் களைச் செலுத்த (எடுத்துக்காட்டாக அறுவை சிகிச் சைக்கான கட்டணம்) வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பளிக்கும் அடிப்படை சுகாதாரக் காப்புறுதித் திட்டம் இது. சிலர் ஒருங் கிணைந்த காப்புறுதித் திட்டங் களுடன் அல்லது கடுமையான நோய்க்கா ன காப்பு றுதியுடன் கூடுதல் பாதுகாப்பும் வைத்து உள்ளனர்.

மெடிஃபண்ட்: கையிருப்பு, மெடிசேவ் அல்லது மெடி‌ஷீல்டு அனைத்தையும் பயன்படுத்தி தீர்த்துவிட்டவர்கள், மெடி ஃபண்ட் உதவி பெற விண்ணப்பிக்கலாம். மெடிஃபண்ட் கோரிக்கைகளின் செலவை அரசாங்கம் ஏற்கிறது. // முழு விவரம்

கல்வி, நிதி இரண்டாம் அமைச்சரும் சிண்டாவின் தலைவருமான குமாரி இந்திராணி ராஜா, இந்தியச் சமூகம் சார்ந்த முக்கிய விவகாரங்களையும் அக்கறைகளையும் கலந்துபேசும் மாதாந்தர கட்டுரை. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ் முரசில் தவறாமல் படித்திடுங்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!