மரினா பே சொகுசுக் கப்பல் நிலையத்தை கண்காணிக்க ‘ஸ்மார்ட் கேமரா’

மரினா பே சொகுசுக் கப்பல் நிலையத்தின் பயணிகள் இந்த நிதியாண்டில் ஒரு மில்லியனைத் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப் படும்நிலையில், நெரிசலினால் ஏற்படக்கூடிய இடர்பாடுகளைத் தடுக்க அறி வார்ந்த தொழில் நுட்பம் பயன் படுத்தப்படவுள்ளது. இந்த மாத இறுதிக்குள் ஒரு விநாடியில் 750 படங்கள் வரை எடுக்கக்கூடிய மொத்தம் 460 கேமராக்கள் உணர்கருவிகளுடன், பயணப் பெட்டிகளைச் சோதிக்கும் இடம் போன்ற நிலையத்தின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்படும். “முனையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கைஅ திகரிப்பதால், பயணிகளின் பயண அனுபவத்தைப் பாதிக்கா மல், நெரிசலைத் தடுப்பதற்கான முன்நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என நினைக் கிறோம்,” என்று முனையத்தை நிர்வகிக்கும் சாட்ஸ்-குருவர்ஸ் தலைமை நிர்வாகியான லயனல் வோங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

போக்குவரத்து நிலைமையையும் பயணிகள் போக்குவரத் தையும் உடனுக்குடன் கண் காணிக்க உயர் தொழில் நுட்பத்தை முனையம் நாடுகிறது. இதன்வழி, ஊழியர்கள் முனையத்தின் செயல்பாட்டைக் கண்காணிப்பதுடன் இடையூறுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும் என்றார் அவர். 2012ல் செயல்படத் தொடங்கி யதிலிருந்து மரினா பே சொகுசுப் பயணக்கப்பல் முனையம் பரபரப்பாகச் செயல்பட்டு வருகிறது. வரும் 2019 மார்ச் 31ஆம் தேதி அளவில் முனையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை 1.4 மில்லியனாகி விடும் என எதிர்பார்க்கப் படுகிறது.