புதிய குடியேறிகளை ஒருங்கிணைக்க கேளிக்கை நிகழ்ச்சி

சிங்கப்பூர் சமுதாயத்தில் புதிய குடியேறிகளை ஒருங்கிணைக்க முற்படும் 'இன்டிகிரேஷன் அண்ட் நேச்சுரலைசேஷன் சாம்பியன்ஸ்' என்ற குழுவின் ஏற்பாட்டில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்று ஏங்கர்வேல் சமூக மன்றத்தில் நேற்று காலை நடைபெற்றது. அங் மோ கியோ குழுத் தொகு தியையும் செங்காங் வெஸ்ட் தனித்தொகுதியையும் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர் களும் புதிய குடியேறிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண் டனர்.

சிங்கப்பூர் சமுதாயத்தில் குடி யேறிகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்த 'இன்டிகிரேஷன் அண்ட் நேச்சுரலைசேஷன் சாம்பியன்ஸ்' குழுவினர் 2007ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டனர். அப்போது 640 பேரைக் கொண்ட குழுவில் இப்போது 1,470 பேர் தொண்டாற்றுகின்றனர். சிங்கப் பூருக்குப் புதிதாக வந்துள்ள குடியேறிகளுக்கு அடிப்படை சேவைகள் மற்றும் வளங்கள் பற்றிய தகவல்களைக் கொடுப்பது, அவர்களுக்குப் புதிய தொண்டூழிய வாய்ப்புகளை ஏற்பாடு செய்வது போன்றவற்றை இவர்கள் செய்து வருகின்றனர். மேலும், சிங்கப் பூரர்கள் புதிய குடியேறிகளுடன் உறவாடுவதற்கான வாய்ப்புகளை வழங்கும் நிகழ்ச்சிகளையும் இந்தக் குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

'ஒன் கம்யூனிட்டி ஃபியெஸ்டா 2018: லா கோப்பி@ஏங்கர்வேல்' நிகழ்ச்சியில் அங் மோ கியோ குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரும் அடித்தள அமைப்பின் ஆலோச கருமான திரு கான் தியாம் போ கேளிக்கை நடவடிக்கைகளில் பங்கேற்கிறார். படம்: மக்கள் கழகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!