உயிரினங்களைப் பாதுகாக்க, கடற்கரையை மீட்கத் திட்டம்

உபின் தீவின் வடக்குப் பகுதி கடற்கரையை மீட்பதற்கான திட் டமும் அங்கு கடலோர நடை மேடை ஒன்றை அமைக்கும் திட்ட மும் அந்தத் தீவில் வசிக்கும் அரிய தாவர, விலங்குகளைக் காப்பதற்கான திட்டங்களும் அறி விக்கப்பட்டிருக்கின்றன. உபின் தீவில் அரிய உயிரி னங்கள் அதிகம் என்றும் அவற் றைப் பாதுகாக்க மேலும் பல நட வடிக்கைகள் அவசியம் என்றும் தேசிய வளர்ச்சி, உள்துறை மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று இந்தத் திட்டங்களை அறிவித்தபோது குறிப்பிட்டார்.

உபின் தீவில் அந்தத் தீவிற்கே உரிய 720க்கும் அதிக தாவரச் சிற்றினங்களும் 500க்கும் அதிக விலங்குச் சிற்றினங்களும் வாழ் வதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். அவற்றில் பலவும் சிங்கப்பூர் பிரதான நிலப்பரப்பில் இல்லை என்பதை எடுத்துக்காட்டிய அமைச்சர், உபின் தீவின் உயிரி யல் வளத்தைக் காக்க பல நட வடிக்கைகளைக் கட்டாயம் எடுக்க வேண்டும் என்றார். “உபின் தீவின் கடற்கரை அரிப்புக்கு உள்ளாகி வருகிறது. கடற்கரையை மீட்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தத் திட்டங்களின் விளைவாக வருங் காலத்தில் அந்தத் தீவின் அரிய உயிரினங்கள் காப்பற்றப்படுவதற் கான ஒரு தளம் ஏற்படுத்தப்படும்,” என்று அவர் குறிப்பிட்டார். உபின் தீவுத் தொடர்பில் 2014ல் ‘உபின் திட்டம்’ என்ற ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. உபின் தீவு கடற்கரையை மீட்பது உடனடி முன்னுரிமை நடவடிக் கைகளில் ஒன்றாக அதில் அறி விக்கப்பட்டிருந்தது. உபின் தீவின் தனிச்சிறப்புத் தன்மைகளை எப்படி எல்லாம் கட்டிக்காக்கலாம் என்பதைப் பற் றிய கருத்துகளை, யோசனை களைத் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு அப்பொழுது வேண்டு கோள் விடுக்கப்பட்டது.

தேசிய வளர்ச்சி, உள்துறை மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ (இடது) உபின் தீவில் நேற்று பொதுமக்கள், அடித்தளத் தலைவர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டார். படம்: சாவ் பாவ்