பிரார்த்தனை நிறைந்த பெருநாள்

இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் மன­நிம்­மதி இல்­லா­த­தாக, கலக்­க­மா­ன­தாக பல­ருக்­கும் இருப்­ப­தாக குறிப்­பிட்ட 36 வயது பொறி­யிய­லா­ள­ரான நிசாம் ஏ ஹாஜா­வுக்கு, எப்­போ­தும் முழு நோன்பை­யும் பிடித்து முடித்து பின்னர் ஏற்­படும் மகிழ்ச்சி ஏனோ இந்த முறை உண்டா­க­வில்லை. அம்­மா­வின் சிறப்பு நோன்புப் பெருநாள் காலை சமையலை மனைவி, மகன், உற­வி­னர்­கள் என எல்­லா­ரு­ட­னும் ஒன்­று­சேர்ந்து உண்டு களித்­த­போ­தும் நிம்மதி இல்­லா­மல் இருந்ததா­கக் கூறிய திரு நிசாமின் வருத்­தத்­திற்­கும் கோபத்­திற்­கும் காரணம் தொடர்ந்து நடை­பெ­றும் தாக்­கு­தல்­கள், உயிர்ப்­ப­லி­கள். அதுவும் இஸ்­லாத்­தின் பெயரால் அவை நடத்­தப்­படு­வது.

"ஐஎஸ்ஐ­எஸ் போதனை மிகத் தவ­றா­னது. பலர் பாதிக்­கப்­படு­கிறார்­கள். உயி­ரி­ழக்­கிறார்­கள். இதைத் தடுக்க சிங்கப்­பூ­ரில் வாழும் நம்மால் நேர­டி­யாக எதுவும் செய்ய முடி­யா­விட்­டா­லும் இஸ்லாம் போதிக்­கும் நல்ல விஷ­யங்களை முடிந்தவரை பரப்ப வேண்டும். மற்­ற­வர்­களின் சுமை களைக் குறைக்க உத­வ­வேண்­டும். உதவி தேவைப்­படு­வோ­ருக்கு உதவ வேண்டும்," என்பது அவரது நோக்கம். இதே கருத்தைப் பகிர்ந்­து­கொண்ட தனியார் பல்­கலைக்­க­ழக மாண­வ­ரான முகமட் ப‌ஷீர், 25, "உலக மக்­களுக்கு அமை­தியை­யும் நிம்­ம­தியை­யும் கொடு என்பதே எல்­லா­ரது பெருநாள் வேண்­டு­த­லாக இருந்தது. எப்­போ­தும் இந்தப் பிரார்த்­தனை இருக்­கும். இந்த ஆண்டு இது அதி­க­மாக இருந்தது," என்றார்.

இந்த முறை பள்­ளி­வா­சல்­களில் சிறப்­புத் தொழுகைக்­குப் பின்னர் இடம்­பெற்ற சம­ய­ போ­தனை­யில் தாக்­கு­தல்­கள் பற்­றி­யும் இந்த நேரத்­தில் மக்கள் அதிகம் கடைப்­பி­டிக்க வேண்டிய சமய நல்­லி­ணக்­கம், ஒற்றுமை குறித்துமே பேசப்­பட்­டது என்றார் 38 வயது திரு முகம்­மது சுலைமான். "எந்த உயிரை­யும் எடுக்க எவ­ருக்­கும் உரிமை இல்லை என இஸ்லாம் கூறு­கிறது. ஆனால் நடக்­கும் சம்ப­வங்களைப் பார்க்­கும்­போது நம்­பிக்கை­கள் சிதைந்து, பயம் ஏற்­படு­கிறது," என்ற அவர், இந்­நே­ரத்­தில் சிங்கப்­பூ­ர­ராக இருப்­பதை எண்ணிப் பெருமைப்­படு­வ­தா­கக் குறிப் ­பிட்­டார்.

பிடோக்கில் உள்ள அல்டக்கா பள்ளிவாசலின் வெளியே திரண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு வாழ்த்துக் கூறும் மனித வள அமைச்சர் லிம் சுவீ சே. ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி, ஃபெங்ஷான் தனித்தொகுதி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடித்தளத் தலைவர்கள் நேற்று அங்கு முஸ்லிம்களுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!