இருநாட்டுக் கூட்டுறவை வலியுறுத்தும் பிரதமர் லீயின் இந்திய பயணம்

புதுடெல்லியிலிருந்து தமிழவேல்

பல ஆண்டுகளாகவே சிங்கப்பூரும் இந்தியாவும் வர்த்தகம் புரிந்து வந்திருந்தாலும் இரு நாடுகளுக் கிடையே நிலவும் நல்லிணக்கமும் வர்த்தகக் கூட்டுறவும் கடந்த சில ஆண்டுகளாக வேக வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து சிங்கப்பூர்- இந்தியா இரு நாட்டு வர்த்தகத்துக்கான வாய்ப்பு கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு திரு மோடி இங்கு வருகை தந்தபோது இந் தியா=சிங்கப்பூர் உத்திபூர்வ பங்காளித்துவ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த இருநாட்டுக் கூட்டுறவின் மேம்பாட்டைத் தொடர்ந்து நிலை நாட்டவும் இந்த ஒப்பந்தத்தின் முன்னேற்றத்தைக் கண்டறியவும் பிரதமர் லீ சியன் லூங் இந்தியாவுக்கு ஐந்து நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ளார். உத்திபூர்வ பங்காளித்துவ ஒப் பந்தம் செய்யப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையேயும் தற் காப்பு, வர்த்தகம், நிதித்துறைகளில் புதிய உடன்பாடுகளும் கூட்டு முயற்சிகளும் நடைபெற்று வந்துள் ளன. அதேபோல இரு நாடு களுக்கு இடையே உயர் மட்ட அர சியல் பரிமாற்றங்கள் இவ்வாண்டு நடைபெற்றுள்ளன. இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கள் இங்கு வருகை தந்தனர்.

இந்திய தற்காப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் சிங்கப்பூரில் ஜூன் மாதம் நடைபெற்ற தற்காப்பு அமைச்சர்கள் ஷங்கிரிலா கலந்து ரையாடலில் கலந்துகொண்டார். மேலும் இந்தியாவின் சாலைப் போக்குவரத்து விரைவுச்சாலை அமைச்சர் நித்தின் கட்காரி செப் டம்பர் மாதம் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்து கொள்ள இங்கு வந்திருந்தார். சிங்கப்பூர் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் இவ் வாண்டு ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் இந்தியப் பயணம் மேற் கொண்டுள்ளார். பொருளியல் ரீதியாகவும் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் பெருகியுள்ளது. இந்தியா சிங்கப் பூரின் 10ஆவது பெரிய வர்த்தகப் பங்காளித்துவ நாடாகத் திகழ் கிறது. சிங்கப்பூருக்கும் இந்தியாவுக் கும் இடையிலான மொத்த வர்த் தகம் கடந்த ஆண்டு $22 பில் லியனைக் கடந்துள்ளது. சிங்கப்பூரில் இந்தியாவின் முதலீடு கடந்த 2014ஆம் ஆண்டு $19 பில்லியனைக் கடந்துள்ளது.

இந்தியாவில் சிங்கப்பூரின் முதலீடு கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகரித்துள்ளது. அப்போது $653 மில்லியனாக இருந்த சிங்கப்பூர் முதலீடு கடந்த ஆண்டு $19.4 பில்லியனைக் கடந்துள்ளது. சொல்லப்போனால் சின்னஞ் சிறிய சிங்கப்பூர் இந்தியாவின் இரண்டாம் பெரிய வெளிநாட்டு முதலீட்டு நாடாகத் திகழ்கிறது என்பதே இந்தியாவின் வளர்ச்சி யில் சிங்கப்பூர் கொண்டுள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. இந்தியாதான் ஆகப் பெரிய எண்ணிக்கையில் சிங்கப்பூரில் நிறுவனங்களை நிறுவியுள்ள நாடு. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் வர்த்தகம் புரிய 8,500க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரைத்தான் மையமாகக் கொண்டுள்ளன. இதுபோன்ற இன்னும் பல வர்த்தக் வாய்ப்புகளையும் கூட்டுறவுகளையும் இரு நாடுகளும் ஆராய்ந்து வரும் வேளையில் பிரதமர் லீயின் இந்தியப் பயணம் மேலும் பல கதவுகளைத் திறக்கும் என்று நம்பலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களைப்போல, மல்கர்-பிரியங்கா தம்பதி நம்பத்தகுந்த சாட்சியங்களாக இல்லை என்று நேற்றுத் தீர்ப்பு வாசித்தபோது மாவட்ட நீதிபதி சைஃபுதீன் சருவான் கூறினார். கோப்புப்படம்

15 Nov 2019

வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டிய இந்தியத் தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’

இஸ் ஃபயாஸ் ஸயானி அகமது எனும் அந்த 9 மாதக் குழந்தை இம்மாதம் 8ஆம் தேதி இறந்துபோனதையடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு புதைக்கப்பட்டதாக அவனது குடும்பத்தாரின் ஃபேஸ்புக் பதிவுகள் குறிப்பிட்டன. படம்: ஃபேஸ்புக்

15 Nov 2019

குழந்தையின் தலையை காரில் மோதிய ஆடவர்மீது இப்போது கொலைக் குற்றச்சாட்டு