மலேசியா: தொடங்கப்பட்ட முதல் வாரத்திலேயே எம்ஆர்டி நிலையங்களில் விஷமிகள் கைவரிசை

மலேசியாவில் புதிய பெருவிரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டு ஒரு வாரகாலமே ஆகும் நிலையில் சில ரயில் நிலையங்களில் பொதுச் சொத்துகள் விஷமிகளால் சேதப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றைச் சரிசெய்ய ஆயிரக் கணக்கான ரிங்கிட்டைச் செலவிட வேண்டிய நிலைக்கு அதன் உரி மையாளரான 'எம்ஆர்டி கார்ப்' தள்ளப்பட்டுள்ளது. தலைநகர் கோலாலம்பூரின் மத்திய வர்த்தக வட்டாரத்தை, நகரின் வடமேற்கு, தென்கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ள குடி யிருப்புப் பகுதிகளுடன் இணைக் கும் வகையில் 21 பில்லியன் ரிங்கிட் செலவில் அந்த எம்ஆர்டி சேவை ஏற்படுத்தப்பட்டது.

முதற்கட்டமாக சுங்கை புலோ முதல் செமந்தான் நிலையம் வரை யிலான சேவை கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்டது. செமந்தான் முதல் காஜாங் நிலையம் வரைப் பட்ட இரண்டாம் கட்ட சேவையை இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கி வைத்த மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், அதை 'உலகத் தரமான திட்டம்' என்று வர்ணித்தார். இந்த நிலையில், அத்தடத்தில் உள்ள சுரங்கப் பாதை நிலையங் களில் குறைந்தது நான்கில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நீள்இருக்கைகளில் கீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடற்குறையுள்ளோருக்கான கழிப் பறை ஒன்றில் கழிப்பறைத் தொட்டியும் உடைக்கப்பட்டிருந்தது. பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிக்கும் இத்தகைய செயல் கள் அந்தப் பொதுப் போக்கு வரத்துத் திட்டத்தைக் களங்கப் படுத்தும் விதத்தில் இருப்பதாக 'த ஸ்டார்' நாளிதழ் குறிப்பிட்டு இருக்கிறது.

ரயில் நிலையங்களில் உள்ள நீள்இருக்கைகளிலும் சுவர்களிலும் ஏராளமான கீறல்கள் இருப்பதாகவும் கழிப்பறை ஒன்று உடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. படம்: டுவிட்டர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!