நினைவுகளை மலரச்செய்யும் சுற்றுலாக்கள்

சிங்கப்பூரின் 200வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சி களில் ஓர் அங்கமாக 'மை டாசன் பாரம்பரியச் சுற்றுலா' எனும் நான்கு மணி நேர சுற்றுலா நிகழ்ச்சி நேற்று இடம்பெற்றது. 'மை கம்யூனிட்டி' எனும் அமைப் பைச் சேர்ந்த தொண்டூழியர்கள் இந்த சுற்றுலாவை வழிநடத்தினர்.
ஒவ்வொரு மாதத்தின் முதல் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்பட உள்ள 5.6 கி.மீ. தூர சுற்றுலாவின் முதல் நிகழ்ச்சி நேற்று 36 பங்கேற்பாளர்களுடன் இடம்பெற்றது.
படைவீரர்கள் தங்குவதற்காக 1861ஆம் ஆண்டு பிரிட்டிஷார் கட்டிய தங்ளின் முகாம், 1990களின் தொடக்கத்தில் பிரிட்டிஷ், அமெரிக்க நிறுவனங்கள் பொருட்களை வைத்திருந்த சாட்ஸ்வொர்த் பார்க் கன்சர்வேஷன் பகுதி, பல முக்கிய நிலையங்களை அமைக்க பிரிட்டிஷார் 1949ல் உருவாக்கிய ஃபீனிக்ஸ் பார்க் வளாகம் ஆகிய பகுதிகள் இந்தச் சுற்றுலாவில் இடம்பெற்றன.
கடந்த கால நினைவுகளைக் கண் முன் நிறுத்தும் அனுபவ நினைவூட்டல்கள் என நேற்று நடைபெற்ற இந்தச் சுற்றுலா பற்றி தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சியா ‌ஷி லு கூறினார். நேற்றைய சுற்றுலாவில் மொத்தம் 12 இடங்கள் சுற்றிக்காட்டப்பட்டன. அதில் பெரும்பாலும் டாசன், குவீன்ஸ்டவுன் குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
முன்பு இந்தப் பகுதியில் வசித்த 57 வயது பிரிசில்லா யீ நேற்றைய சுற்றுலாவில் கலந்து கொண்டு மலரும் நினைவுகளில் திளைத்தார். தற்போது பிடோக் பகுதியில் வசிக்கும் அவர் தமது 12வது வயதுவரை இந்தப் பகுதி யில் வசித்தார்.
'மை கம்யூனிட்டி' ஏற்பாடு செய்யும் மற்ற சுற்றுலாக்களில் கலந்துகொள்ள விரும்புவோர் www.mycommunity.eventbrite.sg என்ற இணையப்பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு சுற்றுலாவிற்கும் 50 பேர் வரை பதிவு செய்யலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!