கடல் எல்லை கோரிக்கைகள் தற்காலிகமாக கைவிடப்பட்டன 

தங்கள் துறைமுகங்கள் தொடர் பான கடல் எல்லை கோரிக்கைகளை மலேசியாவும் சிங்கப்பூரும் பரஸ்பர இணக்கத்தின் பேரில் தற்காலிகமாகக் கைவிட முடிவெ டுத்துள்ளன.அதன்படி 2018ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி, 2018ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஆகியவற்றுக்கு முன்னர் இருந்த கடல் எல்லை வரையறைகளை இரு நாடுகளும் கடைப்பிடிக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நடவடிக்கை நேற்று முன் தினம் பின்னிரவு 12.01 மணிக்கு நடப்புக்கு வந்தது என்று கடல் துறை, துறைமுக ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

"தஞ்சோங் பியாய்க்கு அப்பால் உள்ள ஜோகூர் பாருவின் கடல் எல்லை, துவாசுக்கு அப்பால் உள்ள சிங்கப்பூரின் கடல் எல்லை ஆகியவற்றைச் சுற்றியுள்ள கடல் துறை விவகாரங்களை ஆராயும் பணிக்குழுவின் அறிக்கையில் ஐந்து பரிந்துரைகளில் ஒன்றின் தொடர்பில் இந்தத் தற்காலிக கைவிடல் ஏற்பட்டுள்ளது," என்று ஆணையம் கூறியது.

"இம்மாதம் 14ஆம் தேதி சந்தித்த சிங்கப்பூர், மலேசியப் போக் குவரத்து அமைச்சர்கள், கடல் எல்லை கோரிக்கைகளைத் தற்கா லிகமாகக் கைவிட்டு, நிலைமை யின் பதற்றத்தைக் குறைக்க இணக்கம் கண்டனர்," என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளைத் தற் காலிகமாக ரத்து செய்வதுடன், அந்தப் பகுதியில் தங்கள் அர சாங்கக் கப்பல்களை நிறுத்த வேண்டாம் என்றும் இரு நாடுக ளும் ஒப்புக்கொண்டன. கடந்த ஆண்டு அக்டோபரில் மலேசியா தன்னிச்சையாகஜோகூர் பாரு துறைமுக எல் லையை விரிவாக்கம் செய்ததும், துவாசுக்கு அப்பால் உள்ள சிங்கப்பூர் கடல் எல்லை தொடர் பாக இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்தன. மலேசியாவின் இந்த நடவடிக் கைக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் சிங்கப்பூர் தனது துறைமுக எல்லையை விரிவாக்கம் செய்திருப்பது குறித்து அறிவித் தது.

சிங்கப்பூர் துறைமுக எல்லைக்குள் கடந்த ஆண்டு இறுதியில் மலேசியக் கடல்துறையின் கப்பலான 'எம்வி பெடோமான்' நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதை சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் 'ஆர்எஸ்எஸ் ஜஸ்டிஸ்' போர்க்கப்பல் கண்காணிக்கிறது.

படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!