வாழ்க்கைச் செலவு குறைய திறந்த மின்சார சந்தை எப்படி உதவும்

இந்திராணி ராஜா

சிங்கப்பூரில் 2010 முதல் வருவாய் கூடி இருந்தாலும் வாழ்க்கைச் செலவு என்பது குறிப்பாக குறைந்த, நடுத்தர வருமான பிரிவினரிடையே ஒரு பிரச்சினையாகவே இன்னமும் இருக்கிறது.
வாழ்க்கைச் செலவு பல அம்சங்களை உள்ளடக்குகிறது. ஒருவரின் தேவைகள், வாழ்க்கையின் கட்டம், வாழ்க்கைப்பாணி ஆகியவற்றை அது சார்ந்து இருக்கிறது. இருந்தாலும் உணவு, மளிகைப் பொருட் கள், பயனீடு, போக்குவரத்து, சுகாதாரப் பராமரிப்பு போன்ற வழக்கமான தேவை கள் பற்றிதான் பொதுவாக கவலை நிலவுகிறது. 
செலவுகள் உயர்வதைத் தடுப்பது என்பது எப்போதுமே இயலாத ஒன்று. எடுத்துக்காட்டாக நம்முடைய உணவுப் பொருட்கள் பெரும்பாலும் இறக்குமதி யாகின்றன. ஆகையால் அவற்றின் விலையை வெளிநாட்டு வழங்கீட்டாளர் களே நிர்ணயிக்கிறார்கள். அது நம் கட்டுப்பாட்டில் இல்லை. 
வாழ்க்கைச் செலவு பற்றிய மக்களின் கவலைகளை அரசாங்கம் புரிந்துகொள் கிறது. வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க உதவவும் மக்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய வகையில் பலவற்றையும் வைத் திருக்கவும் செயல்வடிவிலான வழிகளை அரசாங்கம் நாடி வருகிறது. நம்முடைய உத்திகளில் இவை உள்ளடங்கும்:
சிங்கப்பூர் வெள்ளியை வலுவானதாக அரசு நிலைநாட்டி வருகிறது. (இறக்கு மதிப் பொருட்களைக் கொள்முதல் செய் யும்போது இதன் காரணமாக நமக்கு மிகவும் அனுகூலமான பரிவர்த்தனை விகிதம் கிடைக்கிறது).
பல தரப்புகளிலிருந்தும் பொருட்களை வாங்கும் நடைமுறை காரணமாக ஒரு தரப்பில் விலை கூடினால் வேறு தரப்பை நாடலாம். அங்கு விலை குறைவாக இருக்கக்கூடும். 
சமைக்கப்பட்ட உணவு, மளிகைப் பொருட்களுக்குத் தாக்குப்பிடிக்கக் கூடிய பல வாய்ப்புகளை வழங்குவது. வழக்கீட்டாளர்களுக்கு இடையே போட் டியை நடைமுறைப்படுத்துவது. 
இவற்றுக்கு எல்லாம் மேலாக, அரசாங்கம் நேரடி மற்றும் மறைமுக மானியங்களையும் வழங்குகிறது. 
இன்றைய கட்டுரையில், மின்சார செலவைக் குறைக்க உதவும் வகையில் நாம் என்ன செய்கிறோம் என்பதில் ஒரு மித்த கவனம் செலுத்த விரும்புகிறேன். 
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு குடும்பமும் அதனுடைய பயனீட்டுச் செலவுப் பட்டியலைப் பெறுகிறது. அந்தப் பட்டியலில் மின் கட்டணமும் உள்ள டங்கும். 
ஒரு குறிப்பிட்ட மாதத்திற்குரிய மின் கட்டணம், அந்த மாதத்தில் அதே அளவு மின்சாரத்தை நீங்கள் பயன்படுத்தி இருந்தாலும், முந்தைய மாதங்களைவிட வேறுபட்டு இருப்பதை நீங்கள் காணலாம். 
நமக்குத் தேவையான மின்சாரம் இயற்கை வாயுவிலிருந்து தயாரிக்கப் படுகிறது. இந்த வாயு இறக்குமதி செய்யப்படுகிறது. 
பெரும்பாலான இயற்கை வாயு விலை என்பது எண்ணெய் விலையுடன் சம்பந் தப்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக  நம்முடைய மின் கட்டணம் உலக எண் ணெய் விலைக்கு ஏற்ப ஏறும் அல்லது இறங்கும். இதுவே அதற்குக் காரணம். 
ஆகையால், உலக எண்ணெய் விலை உயரும்போது நம்முடைய மின் கட்டண மும் கூடும். அதேப்போன்று எண்ணெய் விலை இறங்கினால் மின் கட்டணமும் குறையும். 
ஆனால், உலக எண்ணெய் விலை இறங்கும்போது உடனடியாக அடுத்த மாத மின் கட்டணத்தில் அது பிரதி பலிக்கவில்லையே? அதே போன்று எண் ணெய் விலை ஏறும்போது கட்டணமும் கூடவில்லையே? என்று சிலர் கேட்கக் கூடும். இதற்குக் காரணம் உண்டு. 
எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு காலாண்டும் கணக் கிடப்படுகிறது. ஆகையால் அது அடுத்த காலாண்டில் வரும் மின் பயனீட்டுக் கட்டணத்தில் பிரதிபலிக்கும். இதன் காரணமாகவே, எண்ணெய் விலையில் ஏற்படக்கூடிய மாற்றம் மூன்று மாதத் திற்குப் பிறகு வரக்கூடிய மின் கட்டணப் பட்டியலில்தான் பிரதிபலிக்கும். 
உலக அளவில் எரிசக்தி விலை பெரிய அளவில் கூடுவதால் ஏற்படக் கூடிய பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள் வதற்காக நாம் எரிவாயு இறக்குமதிக் கான வழிகளை பலமுனைப்படுத்து கிறோம். ஆகையால் விலை அதிகரிக்கும் போது அதனால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைவாக இருக்கும். 
மின் கட்டணத்தைக் குறைக்க திறந்த மின்சார சந்தை எப்படி உதவும்
மின் கட்டணங்கள் கட்டுப்பாட்டில் இருக்க உதவும் வகையில் அரசாங்கம் இப்போது மேலும் ஒரு நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. 
முன்பு எஸ்பி சர்வீசஸ் என்ற ஒரே ஒரு மின்சார சில்லறை விநியோக நிறுவனம் மட்டுமே இருந்தது. சென்ற ஆண்டு எரிசக்திச் சந்தை ஆணையம் திறந்த மின்சார சந்தை நடைமுறையைத் தொடங்கியது. அதன் மூலம் மின்சார சந்தை திறந்துவிடப்பட்டது. போட்டிக்கு ஊக்கமூட்டும் வகையில் பல்வேறு மின் சார சில்லறை வர்த்தக நிறுவனங்கள் சந்தையில் நுழைய வாய்ப்பு ஏற்பட்டது.
போட்டி காரணமாக சில்லறை நிறு வனங்கள், போட்டித்திறன்மிக்க கட்ட ணத்தில் மின்சாரத்தை வழங்குவதற்குப் போட்டியிடும் என்பதால் மின்சார செலவு குறைய உதவி கிடைக்கும். 
அதோடு மட்டுமின்றி, சந்தையில் அதிக இடத்தைப் பிடிப்பதற்காக நிறு வனங்கள் மதிப்புக் கூட்டிய திட்டங் களையும் சேவைகளையும் நடைமுறைக் குக் கொண்டுவரும். இவற்றின் விளை வாக வாடிக்கையாளர்களுக்குப் பணம் மிச்சமாகும். 
வாடிக்கையாளர்களுக்கு இப்போது அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. நீக்குப்போக்கும் உள்ளது. எந்தக் கட் டணத் திட்டம் தங்களுடைய தேவை களைத் தலைசிறந்த முறையில் நிறை வேற்றுகிறது என்பதைப் பார்த்து அவர் கள் தங்களுக்குப் பிடித்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 
சந்தையில் பல சில்லறை வர்த்தக நிறுவனங்கள் இருந்தாலும் தேசிய மின் கட்டமைப்பின் வழியாகவே மின்சாரம் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். 
திறந்த மின்சார சந்தையின் அனு கூலத்தை எப்படி பயன்படுத்துவது
சிங்கப்பூர் முழுவதும் நான்கு கட் டங்களில் இந்த ஏற்பாடு நடப்புக்கு வரு கிறது. இப்போது இந்தச் சந்தை ஏற்பாடு இரண்டாவது கட்டத்தில் இருக்கிறது. 
அங் மோ கியோ, பீஷான், சிராங்கூன் கார்டன்ஸ், ஹவ்காங், பொங்கோல் போன்ற பகுதிகள் தங்களுக்குப் பிடித்த சில்லறை வர்த்தக நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 
அப்படி தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாடிக்கையாளர்கள், எளிதான மூன்று செயல்களை செய்யவேண்டும். 
முதலாவதாக, தேவைகளுக்கு ஏற்ற தலைசிறந்த மின் விநியோகத் திட்டம் எது என்பதை பலவற்றையும் ஆராய்ந்து பரிசீலிக்கவேண்டும். http://compare.openelectricitymarket.sg என்ற இணை யத்தளம் மூலம் உங்கள் பகுதியில் மின் சார விநியோகம் செய்யும் பல சில்லறை வர்த்தக நிறுவனங்களின் கட்டணங் களை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 
தரப்படுத்தப்பட்ட இரண்டு கட்டணத் திட்டங்கள் இருக்கின்றன. நிலையான கட்டணத் திட்டம் என்பது அவற்றில் ஒன்று. தள்ளுபடியுடன் கூடிய ஒழுங்கு படுத்தப்பட்ட கட்டணத் திட்டம் மற் றொன்று. அடுத்ததாக, நீங்கள் தேர்ந் தெடுத்துக் கொண்ட நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு விவரம் கேளுங்கள். கட்டண ஏற்பாடு, ஒப்பந்தக் காலம், கட் டணப் பட்டுவாடா நிபந்தனைகள் போன்ற விவரங்களை நீங்கள் பெறலாம்.
சில்லறை மின் விநியோக நிறு வனத்தை மாற்றிக்கொள்ளவேண்டாம் என்று நீங்கள் விரும்பினால் மேலும் எதையும் நீங்கள் செய்யவேண்டாம். மாற்றிக்கொள்ள விரும்புவோர் நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட நிறுவனத் துடன் இணையத்தில் கையெழுத்திடுங் கள். எஸ்பி குரூப் நிறுவனத்துடன் சேர்ந்து அந்த நிறுவனம் இந்த மாற்றத் தைச் செய்துவிடும். 
மேல் விவரம் பெற விரும்புவோர் மின் விநியோக நிறுவனங்கள் நடத்தும் சாலைக்காட்சிகளுக்குச் செல்லலாம். அந்தக் காட்சிகள் பற்றிய விவரங்களை அந்த நிறுவனங்களின் இணையத் தளங் களில் அல்லது சமூக ஊடகப் பக்கங் களில் காணலாம்.
உதவிகளின் இலக்கு
போட்டி மூலம் கட்டணத்தைக் குறைப் பது ஒருபுறம் இருக்க, அரசாங்கம் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் குடும்பங்களுக்கு நேரடி மானியங்களை யும் வழங்கி அந்தக் குடும்பங்களின் பயனீட்டுச் செலவைக் குறைக்கிறது. 
வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடும்பங் கள் எல்லாம் காலாண்டு ஜிஎஸ்டி பற்றுச் சீட்டு=பயனீட்டுச்=சேமிப்பு (U-Save) தள்ளுபடியைப் பெறுகின்றன. 
இவை குடும்பங்களின் பயனீட்டுச் செலவை ஈடுசெய்ய இடம்பெறும் நேரடி மானியங்கள் ஆகும். ஒரு வீட்டின் அளவு, வருமானத்தையும் வளங்களை யும் காட்டும் பரந்த அறிகுறியாகும். 
வாடகை மற்றும் சிறிய அடுக்குமாடி வீடுகளில் குடியிருக்கும் குடும்பங் களுக்குப் பெரிய வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களைவிட அதிக கட்டணத் தள்ளுபடி கிடைக்கிறது. 
2018 வரவுசெலவுத் திட்டத்தில் அறி விக்கப்பட்டதைப் போல, பயனீட்டுச் சேமிப்புத் தள்ளுபடிகள், 2019 முதல் 2021 வரை ஆண்டுக்கு $20 கூட்டப்படும். இந்த ஆண்டு கரிம வரி நடப்புக்கு வருகிறது. அதனால் ஏற்படக்கூடிய மின்சார, எரிவாயு செலவுகளை ஈடுசெய் யும் வகையில் இந்த உயர்வு இடம் பெறுகிறது. 
இந்த ஆண்டு 1 மற்றும் 2 அறை வீவக குடும்பங்கள் ஏறக்குறைய $400 பயனீட்டுச் சேமிப்புத் தள்ளுபடி பெறும். 
இந்தத் தள்ளுபடி, 3 அறை முதல் எக்சிகியூட்டிவ்/பல தலைமுறை வரைப் பட்ட வீடுகளில் வசிக்கும் குடும்பங் களுக்கு $230 முதல் $350 வரை இருக் கும். இதற்குப் பிறகும் யாருக்காவது நிதி உதவி தேவைப்பட்டால் சமூகச் சேவை அலுவலகங்களில் இருந்து கம்கேர் உதவியைப்  பெறலாம். சமூக நிலையங்களையும் அவர்கள் நாடலாம்.