உலகில் லிட்டில் இந்தியாக்களுக்கு குறைவில்லை; மேலும் ஒரு லிட்டில் இந்தியா

உல­கில் அங்­கீ­க­ரிக்கப்பட்ட லிட்­டில் இந்­தி­யாக்­க­ளுக்கு குறை­வில்லை. ஹாங்­காங்­, பாரிஸ், பிராங்­ஃபர்ட், மட்ரிட், டர்­ப­னில் அவை உள்­ளன.

விரி­வ­டை­யும் அந்த உல­கக் குடும்­பத்­தில் சிங்­கப்­பூ­ரின் லிட்­டில் இந்தியக் கலா­சார சுவை­யு­டன் இப்­போது சிட்னியின் ஹாரிஸ் பார்க்­கும் சேர்ந்து­கொண்டு உள்­ளது.

இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி சென்ற மாதம் ஆஸ்­தி­ரே­லியா சென்றிருந்­த­போது அந்­தப் பகு­திக்கு அதி­கா­ர­பூர்வ முறை­யில் லிட்­டில் இந்­தியா என்று பெயர் சூட்­டப்­பட்­டது.

சிட்­னி­யில் வெளி­நாட்டு இந்­தி­யர்­களுக்­கான ஒரு சமூக நிகழ்ச்­சி­யில் பிர­த­மர் மோடிக்கு கதா­நா­யக வர­வேற்பு வழங்­கப்­பட்­டது. ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பல பகு­தி­களில் இருந்­தும் இந்­தி­யர்­கள் சிட்­னியில் குவிந்­த­னர்.

ஹாரிஸ் பார்க்­ பற்றி அவ்­வ­ள­வாகத் தெரி­யாதவர்­க­ளுக்கு விளக்­கிச் சொல்ல­வேண்­டும் என்­றால் அது ஆஸ்­தி­ரே­லி­யா­வில் அமைந்­துள்ள ஒரு குட்டி இந்­தியா போன்­றது என்று கூறலாம்.

சுத்த சைவ உண­வைப் பொறுத்­த­வரை லா ஜவாப் அல்­லது தாஜ் இந்தி­யன் சுவீட்ஸ் அண்ட் ரெஸ்­டா­ரண்ட் ஆகிய இரண்டை கூறி­னாலே போதும்.

இனிப்புக்கு அவ்­வ­ளவு இலே­சாக வசப்­ப­டாத எனக்கு மூலி­கை கலந்த பில்­லூஸ் நவாஜி சிக்­கன், ஹைத­ரா­பாத் ஹவு­சின் ஆட்டு இறைச்சி எல்­லாம் பல ஆண்­டு­க­ளுக்கு முன் நான் அனு­பவித்து இருந்த இந்­திய சுவை­யை என்­னுள் கிளப்­பி­விட்­டன. வட இந்­திய சுவை­க­ளு­டன் தென்­னிந்­திய சுவை களும் உண்டு.

அதோடு, சுல்ஹோ என்ற உண­வ­கத்­தில் ஒவ்­வொரு நாளும் நேப்­பாள இந்­திய உணவு வகை­க­ளை­யும் ஒரு பிடி பிடிக்­க­லாம். பக்கத்தில் இருக்கும் திபெத்­திய நேப்­பாள உண­வ­கத்­தில் இறைச்சி உண­வான தாலி ஒன்று வாங்கினால் அது இரு­வ­ருக்­குப் போது­மா­ன­தாக இருக்­கும்.

சுவைமிக்க சமை­ய­லுக்­குத் தேவை­யான அனைத்து மளி­கைப் பொருள்­களும் கிடைக்­கும் கடை­கள், பஞ்­சாபி ராப் இசை­யு­டன் எப்­போ­தா­வது கடந்து செல்­லும் கார்­கள் எல்­லாம் ரயில்வே நிலை­யத்­திற்கு அரு­கே அமை­ந்தி­ருக்­கும் ஹாரிஸ் பார்க் எப்­படி இருக்­கும் என்­பது பற்­றிய ஒரு எண்ணத்தை உங்­க­ளி­டம் ஏற்­ப­டுத்தி இருக்­கும்.

உணவு தேவை­தான். கலா­சா­ர­மும் தேவை அல்­லவா. பஞ்­சாபி, இந்தி, பெங்­காளி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம் இதர மொழி­கள் பேசும் வெளி­நாட்டு வாழ் இந்­தி­யர்­கள், குறிப்பாக வார இறுதி நாள்­களில் அந்­தப் பகு­தியை விழாக்­கோ­ல­மாக்கி இந்­தி­யா­வா­கவே மாற்றிவி­டு­வார்­கள்.

அந்­தச் சூழ்­நிலை எல்­லா­ரை­யும் வர­வேற்­ப­தாக இருக்­கும். ஆஸ்­திரே­லி­யர்­களும் இந்­தி­யர்­களுடன் சேர்ந்து­கொண்டு பகல், இரவு உணவு உண்­பார்­கள். கடைகளில் இளம் வய­து குடி­யே­றி­கள் உணவைப் பரி­மாறு­வார்­கள்.

விருந்­தோம்­பல் சேவை­யில் ஈடு­பட்டு இருந்த பல­ரு­டன் நான் நண்­ப­ரா­னேன்.

சிங்­கப்­பூ­ரில் இருந்து நான் வந்­திருப்­பது தெரிந்­த­தும் அவர்­க­ளுக்கு மிக மகிழ்ச்சி. சிங்­கப்­பூ­ரி­லும் ஒரு லிட்­டில் இந்­தியா இருக்­கிறது என்­பதை அவர்­கள் கேள்­வி­ப்பட்டு இரு­ந்­த­வர்­கள்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளைப் பொறுத்­த­வரை இவை எல்­லாம் பெரி­தாக தெரி­யா­மல் இருக்­க­லாம். ஆஸ்­தி­ரே­லி­யர்­க­ளைப் போலவே சிங்­கப்­பூரர்­களும் இயற்­கை­யா­கவே பல­க­லா­சார மக்­கள். எங்கு இருந்­தா­லும் வேறு நாட்­டில் குடி­யேறி அந்த நாட்டில் புதிய சமூ­கக் கட்­ட­மைப்­பு­களை இந்­தி­யர்­கள் எப்­படி அமைத்­துக்கொள்­கி­றார்­கள் என்­பதை லிட்­டில் இந்­தி­யாக்­கள் எடுத்­துக்­காட்டு­கின்­றன.

தாங்­கள் குடி­யே­றும் நாட்­டின் சமூக நில­வ­ரங்­க­ளு­டன் உறு­தி­யாக தங்­களை இணைத்­துக்கொள்­ளும் அதேவேளை­யில், இந்­தி­யக் கலா­சாரத்தை உலகை எட்­டும் அள­வுக்கு அவர்­கள் விரிவு படுத்­து­கி­றார்­கள்.

குடி­யேற்­றம் என்­பது இரு­வழி வீதி­யா­கும். ஆகை­யால் லிட்­டில் இந்­தி­யாக்­களை இன வட்­டா­ர­மாக வர்­ணிப்­பது எனக்­குப் பிடிப்­ப­தில்லை.

ஒரு குறி­ப்பிட்ட வட்­டா­ரத்­தில் குறிப்­பிட்ட இன மக்­கள் அடர்த்­தி­யாக இருப்­பது இன வட்­டா­ரம் ஒன்றை உரு­வாக்கு­வ­தாகாது. சிங்­கப்­பூ­ரின் சிராங்­கூன் ரோடு வழி­யாக நடக்­கும் அனைத்து சிங்­கப்­பூர் மக்­கள், பொரு­ளி­யல் போக்­கு­வ­ரத்து, தேக்கா சந்தை வட்­டா­ரத்­தின் இந்­தி­யத் தன்­மை­யைக் கட்­டிக்­காக்­கிறது.

வர்­ணனைப்படி லிட்­டில் இந்­தியா என்­பது எப்­போ­துமே இந்­தி­யா­வுக்கு வெளியே இருக்­கும் நிலத்­தில் அமைந்­தி­ருக்க வேண்­டும்.

சீனா­வுக்­கும் சைனா­ட­வு­னுக்­கும் இதுவே பொருந்­தும். ஆசியா ஐரோப்பா, அமெ­ரிக்­கா­வில் 19 நாடு­களில் 35 சைனா­ட­வுன்­கள் செயல்­ப­டு­வ­தாக அறிக்கை ஒன்று தெரி­விக்­கிறது.

அமெ­ரிக்­கா­வில் மட்­டும் சொந்­த­மாக சைனா­ட­வுன் பகு­தி­க­ளைக் கொண்ட 50 நகர்­கள் இருப்­ப­தாக வேறு ஓர் ஆய்வு கூறுகிறது.

உண்­மை­யான எண்­ணிக்கை எப்படி இருந்­தா­லும் சீனாவுக்­கும் தைவா­னுக்­கும் வெளியே உள்ள நிலப்­ப­கு­தி­களில் வசிக்­கும் சீனர்­க­ளைக் குறிப்­ப­தா­கவே சைனா­ட­வு­ன்கள் உள்ளன. அவர்­க­ள் வர­லாற்று பூர்­வீக முறை­யில் சீனர்­கள். ஆனால் இப்­போ­தைய நிலை அப்­படி அல்ல. அவர்­கள் அமெ­ரிக்­க­ராக, பிரிட்டிஷ்­கா­ர­ராக, இந்­தோ­னீ­சி­ய­ராக, மலே­சி­ய­ராக, சிங்­கப்­பூ­ர­ராக இருக்­கிறார்­கள். சீனா­வுக்கு வெளியே சீனர்­கள் பெரும்­பான்­மையாக வாழும் ஒரே நாடான சிங்கப்பூர், அதன் பல கலா­சார நிலைக்குப் பொருத்­த­மான சைனா டவுனை கொண்டுள்ள தென்­கி­ழக்கு ஆசி­ய நாடாகத் திகழ வேண்டும்.

அதே­போ­லவே சிங்­கப்­பூ­ரில் உள்ள சிராங்­கூன் ரோடு அல்­லது ஆஸ்­தி­ரே­லி­யா­வில் உள்ள விக்­ரம் ஸ்தி­ரீட்­டும் திகழ வேண்­டும்.

அந்த வீதி­கள், அவை அமைந்து இருக்­கும் நாடு­க­ளுக்­குச் சொந்­த­மா­னவை. மக்­க­ளுக்­கும் நாடு­க­ளுக்­கும் இடை­யில் அனைத்து கலா­சார வாழ்க்கை முறை­களும் புழங்­கு­வ­தற்கு உருப்­ப­டி­யான வழி­களில் பங்­காற்றி அதன்­மூ­லம் அவை தங்­க­ளு­டைய புரா­தன மரபைப் புதுப்­பிக்­கின்­றன.

லிட்­டில் இந்­தியாக்கள் என்­பவை இந்­திய நில எல்லைக்கு வெளியே இந்­திய கலா­சாரத் தன்­மை­களை விரிவு­படுத்து­பவை.

பிரான்ஸ், ஜெர்­மனி, ஸ்பெ­யின், தென் ஆப்­பி­ரிக்கா, சிங்­கப்­பூர், ஆஸ்­தி­ரே­லிய நாடு­களில் அவற்­றின் ஆளு மைக்கு உட்­பட்ட வாழ்க்கை முறை­களில் இணைந்த வர­லாற்றுத் தொடர்பு­களைக் கொண்­டா­டு­வது என்­பது, லிட்டில் இந்­தி­யாக்­களை கொண்டாடு­வதற்­குச் சம­மா­ன­தா­கும். இந்­தப் பட்டியல் விரி­வ­டை­யட்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!