ஏழு திரை இயக்குநர்கள் நடித்துள்ள புதிய படம்

சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன் கூட்டணியில் நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ படம் வருகிற ஜுலை 1ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ்ச் சினிமாவில் அண்மைக் காலமாக பேய் படங்களுக்கு ஒய்வு கொடுத்துவிட்டனர் போலும். அடுத்து, நகைச்சுவைப் படங்களின் ஆதிக்கம் துவங்கி யுள்ளது என்கிறார்கள். அண்மையில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக் காரன்’ படம் இந்த நகைச்சுவை சீசனை வெற்றிகரமாக துவக்கி வைத்துள்ளது.

ஆகவே இத்தகைய சூழ்நிலை யில் தங்களது ‘அட்ரா மச்சான் விசிலு’ படம் வெளியாவதுதான் சரியாக இருக்கும் என இந்தப் படத்தை தயாரித்துள்ள அரசு பிலிம்ஸ் முடிவெடுத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. நிச்சயம் நகைச்சுவைப் பிரியர் களுக்கு சரியான தீனி போட காத்திருக்கிறார்கள் இப்படத்தின் கதாநாயகன் சிவாவும், மெகா வில்லனாக நடிக்கும் பவர்ஸ்டார் சீனிவாசனும். இருவருக்கும் தனித்தனி ரசிகர் வட்டம் உண்டு என்பதுடன், இருவரும் கூட்டணி சேர்ந்து நடித்தால் அதை ரசிப் பதற்கென இன்னொரு ரசிகர் வட்டமும் இருக்கிறது என்பதே இப்படக்குழுவினரின் நம்பிக்கை. அதற்கேற்றார் போல படத்தின் இயக்குநர் திரைவண்ணனும் நகைச்சுவைக்கு முழு உத்தர வாதம் தருகிறார். இவர் ஜீவா நடித்த ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தை இயக்கியவர்.

‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் ஒரு காட்சி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹிப்ஹாப்’ ஆதி தமிழா. 

20 Mar 2019

நிறைவேறும் கனவுகள்