ரகசியத்தை உடைத்த தமன்னா

நடிகை தமன்னா அண்மையில் அளித்த போட்டி ஒன்றில் தன்னுடைய வெற்றியின் ரகசியத்தைப் போட்டு உடைத்துள்ளார். தைரியம்தான் தன்னுடைய வெற் றிக்குப் காரணம் என்று அப்போது அவர் கூறினார். “கதாநாயகர்களுக்கு எவ்வளவு வயதான லும் பட வாய்ப்புகள் அவர்களைத் தேடி வரும். ஆனால், கதாநாயகிகளுக்கு வயதாகிவிட்டால் பட வாய்ப்புகள் கிடைக்காது. “அதிலும் முன்பெல்லாம் 30 வயது நிரம்பிய கதாநாயகி களுக்கு ஏற்ற கதைகள் இல்லாமல், அவர்களை ஒதுக்கும் நிலையே இருந்தது.

“ஆனால் இப்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாயகிகளின் வயதைப் பொருட்படுத்துவது இல்லை. மூத்த நடிகர்களைப் போல் வயதான நடிகைகளுக்கும் பட வாய்ப்புகள் வருகின்றன. திருமண மான நடிகைகளுக்கும் படங்கள் குவிகின்றன. “இதற்கு உதாரணம் வட இந்திய நடிகைகள். அங்கு திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகும் கதாநாயகிகளாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். “நான் 10 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். இன்னும் எனக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. இதை எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.

“இந்தக் காலகட்டத்தில் நானும் சினிமாவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போதெல்லாம் இயக்குநர்களும் 20 முதல் 30 வயதுக்குள் இருக்கும் பெண்களுக்கான கதைகளையே தயார் செய்கிறார்கள். “என்னிடம் உங்களின் வெற்றி ரகசியம் என்ன என்று பலரும் கேட்கிறார்கள். சினிமாவில் அறிமுகமானபோது தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தேன். “தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் எனக்குத் தெரியாது. கலாசாரமும் வித்தியாசமாக இருந்தது. அப்போது நான் பயந்து இருந்தால் சினிமாவில் நடித்து இருக்கவே முடியாது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் எப்போதுமே வெளிப்படையாகப் பேசவே விரும்புவேன்,” என்கிறார் பிரியா ஆனந்த். படம்: ஊடகம்

19 Nov 2019

பிரியா: வெளிப்படையாகப் பேசுவதையே விரும்புகிறேன்

கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘தம்பி’.

19 Nov 2019

அண்ணி ஜோதிகாவுக்கு தம்பியாக கார்த்தி நடிக்கும் படம் ‘தம்பி’

விருதுகள் கலைஞர்களுக்கு மேலும் சிறப்பாக உழைக்கவேண்டும் எனும் ஊக்கத்தைத் தருவதாகச் சொல்கிறார் நடிகை அதிதி ராவ்.  படம்: ஊடகம்

19 Nov 2019

‘விருதுகள் உற்சாகம் தரும்’