விக்ரம் பிரபு நடிக்கும் - ‘நெருப்புடா’

நடிகர் விக்ரம் பிரபு, பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக 'நெருப்புடா' உருவாகி வருகிறது. "இது அதிரடிக் காட்சிகள் நிறைந்த திகில் படம். விக்ரம் பிரபு ஒரு தீயணைப்பு வீரராக நடிக்கிறார். அவருடன் இணைந்து நிக்கி கல்ராணி நடிக்கிறார். மேலும் பொன்வண்ணன், 'நான்கடவுள்' ராஜேந்தி ரன், 'ஆடுகளம்' நரேன் ஆகியோரும் நடிக்கிறார்கள்," என்கிறார் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் பி.அசோக்குமார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவைக் கவனிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

"விக்ரம் பிரபு நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். எனவே தயக்கமின்றி எனது கதையிலும் நடிக்கச் சம்மதித்தார். இதையே எனக்கான முதல் அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளலாம். "அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இந்தப் படம் உருவாகும். கபாலி பாடலில் இடம்பெற்ற முதல் வார்த்தையே எங்களுக்கு தலைப்பாக கிடைத்ததில் அனைவருக்குமே மகிழ்ச்சி," என்கிறார் பி.அசோக்குமார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!