சுடச் சுடச் செய்திகள்

கீர்த்தி குறித்து இரு புகார்கள்

‘பைரவா’ படப்பிடிப்பின்போது பலமுறை விஜய் ஒப்பனையுடன் வந்து காத்திருக்க, சுமார் ஒரு மணி நேரம் கூட தாமதமாக வந்திருக்கிறாராம். வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்ட விஜய்க்கு, அப்படத் தின் விளம்பர நிகழ்வுகளின் போது கீர்த்தி காட்டிய பந்தாவை தான் பொறுக்கவே முடிய வில்லையாம். இனிமேல் அவர் விஜய்யுடன் நடிப்பாரா என்கிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை,” என்று தமிழக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இது போதாத குறைக்கு இன்னொரு புகாரும் கிளம்பியுள்ளது.

கடந்த பத்து நாட்களாக தனது கைபேசி எண்ணை யாருக்கும் சொல்லாமல் மாற்றிவிட்டாராம் கீர்த்தி. முன்னணி மக்கள் தொடர்பாளர்கள், முன்னணி நடிகர்கள் எனப் பலரும் அவரைத் தொடர்பு கொள்ள பழைய எண்ணையே முயற்சித்துள்ளனர். அப்படியே புதிய எண்ணைத் தேடிப்பிடித்து தொடர்பு கொண்டால், எதிர்முனையில் பேசுப வர், ஆதார் அடையாள எண்ணில் தொடங்கி, பல விவரங்களைக் கேட்பதால், பலரும் கீர்த்தியிடம் பேசவே தயங்குவதாகக் கேள்வி. இதுவும் மேற்குறிப்பிட்ட இணையதளம் தந் துள்ள தகவல்தான். இனி கீர்த்திதான் விளக்கமளிக்க வேண்டும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon