சுடச் சுடச் செய்திகள்

விக்ரமுடன் தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச்

வடசென்னை வாழ்க்கையைச் சொல்லும் படம் வடசென்னை என்றாலே வெட்டு, குத்து நடக்கக்கூடிய, சாமானிய மக்கள் நிறைந்த பகுதி என்றே தமிழ்ச் சினிமா அடையாளம் காட்டியுள்ளது. இது தவறு என்பதையும் அப்பகுதியிலும் படித்த, சமுதாயத்துக்காக உழைக்கக்கூடிய மக்கள் இருப்பதாகச் சொல்ல வருகிறதாம் ‘ஸ்கெட்ச்’. இதில் விக்ரம் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடித்து வருகின்றனர். தொடக்கத்தில் சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பதே இப்படக்குழுவின் விருப்பமாக இருந்ததாம். அவரது கால்‌ஷீட் கிடைக்காததால் தமன்னா நுழைந்திருக்கிறார். வாலு மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான விஜய் சந்தர் இப்படத்தின் இயக்குநர். தமன் இசையமைக்கிறார். சிறு பட்ஜெட் படங்களில் நாயகியாக நடித்துவரும் ஸ்ரீபிரியங்கா இதில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.