மக்களை கண்ணீர் விட வைத்த ஸ்ரேயா

ஸ்ரேயா ரெட்டியை தமிழ் சினிமா ரசிகர்கள் கிட்டத்தட்ட மறந்தேவிட்ட னர். விஷாலின் அண்ணி என்றால் ஒருசிலருக்கு நினைவு வரலாம். போகட்டும், ‘திமிரு’ படத்தில் விஷாலுடன் மோதிய ஸ்ரேயாவுக்கு விரைவில் வெளிவரப்போகும் ‘அண்டாவக் காணோம்’ படம் பெரிய பெயரை பெற்றுத் தரும் என்கிறார்கள். காரணம் அந்தப் படத்தின் கதையும் படமாக்கப்பட்ட விதமும் அப்படி என்பது கோடம்பாக்க விவரப்புள்ளிகளின் தகவல். இப்படத்தை வேல்மதி என்பவர் இயக்கியிருக்கிறார். ஆசை ஆசை யாகத் தன் அண்டாவைப் பாது காக்கும் கிராமத்துப் பெண், அது திடீரென காணாமல் போனால் எவ்வளவு பதற்றப்படுவாள்? அந்த அண்டா மீண்டும் கிடைத்ததா? என்பதுதான் கதையாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை யில் நடைபெற்றது. சுற்றி நிற்கும் கிராம மக்களுக்கு மத்தியில் சுமார் பத்து நிமிடங்கள் இடைவிடாமல் வசனம் பேச வேண்டும் ஸ்ரேயா. அதுவும் கண்ணீரும் கம்பலையுமாக உருக்கத்துடன் நடிக்க வேண்டும். இயக்குநர் சொன்னபடியே வச னம் பேசி முடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால், அந்த ஊரே சுற்றி நின்று அழுது கொண்டிருந்ததாம். ஸ்ரேயாவின் நடிப்பு எல்லோரையும் அசரவைத்தது எனப் பாராட்டுகிறார் வேல்மதி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்

13 Nov 2019

கஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்