நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘பார்ட்டி’

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பார்ட்டி’ விரைவில் வெளியீடு காண உள்ளது. டி.சிவா தயாரித்துள்ள இப்படம் முழுவதும் நகைச்சுவை தூக்கலாக இருக்குமாம். ஜெயராம், சத்யராஜ், ஜெய், ஷாம், நாசர், சம்பத்ராஜ், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடங்களில் நடிக்க, ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என மூன்று நாயகிகள் உள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் இளையர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் தமக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஷாம்.