‘பிகில்’ மோதிரம் பரிசளித்த விஜய்

‘பிகில்’ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நடிகர் விஜய் ‘பிகில்’ என்று பொறிக்கப்பட்ட மோதிரத்தைப் பரிசாக வழங்கியுள்ளார்.  

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘பிகில்’. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் படப்பிடிப்பின்போது நிகழ்ந்த விபத்தில் தொழிலாளர் ஒருவர் பலியானதால் படக்குழுவினர் சோகமடைந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கும் விஜய் உதவி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்