விஜய் சொல்லும் கதை

‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெறும் ‘ஒரு குட்டிக் கதை’ பாடலுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜ்.

ஒரு பாடலாசிரியராகப் பாடலை எழுதிக் கொடுத்ததோடு சரி. அதன்பிறகு விஜய் அந்தப் பாடலைப் பாடிமுடித்து அண்மையில் அது வெளியான பிறகுதான் இவரும் முதன்முதலாக அதைக் கேட்டாராம்.

“இந்தப் பாடலின் மெட்டைக் கேட்டபோதே விஜய் சார் இதைப் பாடினால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து பார்த்து பரவசமடைந்தேன். பாடல் வரிகளைப் பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார் விஜய் சார். ஆனால் என்னால் பேச முடியவில்லை,” என்கிறார் அருண்ராஜா காமராஜ்.

விஜய்யின் குரலைக் கேட்டவுடன் இன்ப அதிர்ச்சியாக இருந்ததாம். அதனால் பேசுவதற்கு வார்த்தைகளே வரவில்லை என்கிறார்.

விஜய்யின் குரலைக் கேட்டபோது பறப்பது போன்ற உணர்வும் ஏற்பட்டதாம்.

“அந்தப் பாடலின் முக்கியக் கருவே நேர்மறை சிந்தனைதான். அண்மைக்காலமாக இணையத்தில் எதிர்மறைக் கருத்துகள், எதிர்மறைப் போக்கு, அதிகமாகி வருவதைக் காண முடிகிறது.
இந்நிலை தொடர்ந்தால் நம்மால் ஒருபோதும் முன்னோக்கிச் செல்ல முடியாது. நேர்மறை விஷயங்கள் மட்டுமே நம்மை முன்னேற்றும் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல கருதியதே இப்படியொரு பாடலை எழுதக் காரணம்.

“இதற்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் அருண்ராஜா காமராஜ்.

விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் எனும் ஆசை தனக்கும் உள்ளதாகக் குறிப்பிடுபவர், அப்படி ஒரு வாய்ப்பு அமையும்பட்சத்தில் நூறு விழுக்காட்டுக்கும் அதிகமாக உழைக்கத் தயார் என்கிறார்.

“இந்தப் பாடலை நான் எழுத வேண்டும் என்று அனிருத் சார் விரும்பினார். அவருடைய அலுவலகத்தில் இருந்து திடீரென ஒருநாள் தொலைபேசி அழைப்பு வந்தது. நாம் இருவரும் சேர்ந்து பணியாற்றப் போகிறோம். அடுத்த 3 தினங்களுக்குள் நேரில் சந்திப்போம். அப்போது அந்தப் பாடல் எப்படி இருக்க வேண்டும், அதன்மூலம் என்ன சொல்லப்போகிறோம் என்பதையெல்லாம் விவரிப்பதாகச் சொன்னார்.

“எனினும் ‘தர்பார்’ படப் பணியில் அனிருத் பரபரப்பாக இருந்ததால் திட்டமிட்டபடி சந்திக்க முடியவில்லை. அதனால் மின்னஞ்சல் மூலமாகத்தான் பேசிக்கொண்டோம். பாடலை எழுதி முடித்ததும் அதைப் பதிவு செய்தார் அனிருத். ஆங்கிலமும் தமிழும் கலந்த பாடலாக இருக்கட்டும் என்று ஐடியா சொன்னது அவர்தான்.

“ஆனால் இது ஆங்கிலப் பாடலுக்கான மெட்டு கிடையாது. இது நம்ம ஊர் பாட்டு. வழக்கமாக நாம் பேசக்கூடிய எளிமையான ஆங்கில வார்த்தைகளை ஒரு மெட்டுக்குள் உட்கார வைப்பது சிரமம்.

“ஆனால் அனிருத் சாரின் மெட்டுக்களுக்கு இயல்பாகவே ஒரு மாயசக்தி உள்ளது. ஒருமுறை அந்த மெட்டைக் கேட்டு ஓரளவு சரியான வார்த்தைகளைத் தேர்வு செய்துவிட்டால் அழகான பாடலாக அது மாறிவிடும்.

“’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களில் விஜய் சாருக்கு ரொம்பப் பிடித்த மெட்டு இதுதான். அனிருத் இதை என்னிடம் தெரிவித்தார். அவர் சொன்ன இந்தத் தகவல் பயம் கலந்த மகிழ்ச்சியை அளித்தது. காரணம் மிகப்பெரிய கதாநாயகனுக்குப் பிடித்தமான பாடலை நான் எழுதுகிறேன் என்பதுதான்.

“பொதுவாக இசை வெளியீட்டு விழாக்களில் பேசும்போது ரசிகர்கள் மனதில் நேர்மறை சிந்தனையை விதைப்பார் விஜய் சார். அவ்வாறு அவர் பேசியதை எல்லாம் தொகுத்து இந்தப் பாட்டின் மூலமாகவும் நேர்மறை சிந்தனைகளை ரசிகர்களுக்குக் கடத்த விரும்பினோம்.

“மேலும் குழந்தைகளுக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும் என்பதால் அவர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் பாடல் வரிகளைத் தேர்வு செய்தோம். இப்போது நாங்கள் எதிர்பார்த்தபடியே பாடல் சிறப்பாக அமைந்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது,” என்கிறார் அருண்ராஜா காமராஜ்.

‘ஒரு குட்டி கதை’ பாடல் வெளியானதுதான் காதலர் தினத்தன்று தமக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு என்று குறிப்பிடுபவர், இப்படியொரு வாய்ப்பு தமக்கு அடுத்து எப்போது கிடைக்கும் என்ற ஏக்கம் இப்போதே துவங்கிவிட்டதாகச் சொல்கிறார்.

“விஜய் சாரின் குரல், அனிருத்தின் இசையில் பாடல் எழுதும் வாய்ப்பு அவ்வளவு சுலபமாகக் கிடைத்துவிடாது. இந்த வாய்ப்பு எனக்கானது என்பதை உறுதி செய்துகொண்ட அந்தத் தருணத்தை வெகுவாக ரசித்து அனுபவித்தேன். பாடல் கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருந்ததோ, அதேபோல் பார்ப்பதற்கும் பிரமிப்பாகவும் இருந்தது,” என்கிறார் அருண்ராஜா காமராஜ்.

விஜய் பாடிய அந்தப் பாடலைப் பார்க்க: https://youtu.be/gjnrtCKZqYg

#விஜய் #குட்டிக்கதை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!