கூட்டுக் குடும்பத்தை வலியுறுத்தும் படம்

கதிர்வேலு இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘ராஜவம்சம்’. இவர் இயக்குநர் சுந்தர்.சியின் உதவியாளராகப் பணியாற்றியவர்.

குருவைப் போலவே நகைச்சுவையுடன் கூடிய குடும்பச் சித்திரத்தை உருவாக்கி வருகிறார். படப்பிடிப்பு முடிந்த நிலையில், தொழில்நுட்பப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

46 நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டுக்குடும்பம், விவசாயத்தில் விளையாடும் தொழில்நுட்பம் என்று தன் முதல் படத்திலேயே அதிரடியாக களமிறங்கி உள்ளார் கதிர்வேலு.

“இவ்வளவுப் பேரையும் எப்படி ஒருங்கிணைத்தீர்கள் என்று பலரும் ஆர்வத்துடன் கேட்கின்றனர். நான் பாடம் கற்றுக்கொண்ட பள்ளிக்கூடம் அப்படி.

“சுந்தர்.சி இயக்கிய எல்லாப் படங்களிலும் மிகப் பெரிய நட்சத்திரக்கூட்டம் இருக்கும். அவரிடம் ஏழு வருடங்கள் பணியாற்றிய அனுபவம்தான், நட்சத்திரங்களை எப்படிக் கையாள்வது? யாரிடம் எப்படி நடந்துகொள்வது? என்று எனக்கு கற்றுக்கொடுத்தது.

“அனைத்து நட்­சத்­தி­ரங்­களும் எனக்கு ஏற்­கெனவே அறி­மு­க­மா­ன­வர்­கள் என்­ப­தால் இந்­தக் கதையை துணிச்­ச­லு­டன் இயக்க ஆரம்­பித்­தேன். துவக்­கத்­தில் கொஞ்­சம் சிர­ம­மா­கத்­தான் இருந்­தது. ஆனால் ஒருங்­கி­ணைத்­த­பி­றகு எல்­லோ­ரும் ஒரே குடும்­ப­மாக மாறி, ஒவ்­வொ­ரு­வ­ரும் இதை தங்­கள் சொந்­தப் பட­மாக நினைத்து உழைத்­த­னர்,” என்­கி­றார் கதிர்­வேலு. சசி­கு­மார் தான் படத்­தின் நாய­கன் என்றதுமே பலர் கதை கேட்­கா­ம­லேயே நடிக்க ஒப்­புக்­கொண்­ட­ன­ராம். சசி­கு­மார் சரா­ச­ரி தமி­ழனை சினி­மா­வில் பிரதி­ப­லிக்­கும் நட்­சத்­தி­ரம் என்­பது கதிர்­வே­லின் கருத்து.

“மற்ற படங்­களில் சசி­கு­மா­ருக்கு என்று ஒரு குடும்­பம் இருக்­கும். இதில் அவ­ருக்கு கூட்­டுக்­கு­டும்­பம் இருக்­கிறது. அப்பா, அம்மா மற்றும் ஐந்து அண்­ணன்­கள், ஐந்து அண்­ணி­கள், ஏழு தாய்­மா­மன்­கள் மற்­றும் அவர்­க­ளு­டைய வாரி­சு­கள் என்று மொத்­தம் இரு­பத்­தேழு பேர் கொண்ட மிகப் பெரிய குடும்­பத்­தைச் சேர்ந்த பிள்ளை அவர்.

“முந்­தைய படங்­களில் பெரும்­பாலும் அவர் கிரா­மத்­தில் வாழ்­ப­வ­ராக இருந்­தார். இதில் தக­வல் தொழில்­நுட்ப நிறு­வன அதி­கா­ரி­யாக வரு­கி­றார். சண்­டைக் காட்­சி­களில் முரட்­டுத்­த­னம் இருக்­காது. சசி­கு­மா­ரின் சக ஊழி­ய­ரா­கப் பணி­யாற்­றும் நிக்கி கல்­ராணி திடீ­ரென அவ­ரைக் காத­லிப்­பார். அவர்­க­ளு­டைய திரு­ம­ணம் கிரா­மத்­தில் நடக்­கும்.

“நக­ரத்­தைச் சேர்ந்த பெண்­ணான அவர், கிரா­மத்து சம்­பி­ர­தா­யங்­களை எப்­படி ஏற்­றுக்­கொள்­கி­றார்? முடி­யாத நிலை­யில் சசி­கு­மார் எப்­படி அவரை ஏற்­றுக்­கொள்ள வைக்­கி­றார் என்­பது கதை. இதில் டூயட் கிடை­யாது. முத்­தக்­காட்சி கிடை­யாது. கட்­டிப்புடி வைத்­தி­யம் கிடை­யாது. ‘ஐ லவ் யூ’ என்­று­கூட சொல்லமாட்­டார். ஆனால், இந்­தக் காதல் மிக­வும் இயல்­பாக இருக்­கும்,” என்­கி­றார் கதிர்­வேலு. அரு­கி­வ­ரும் கூட்­டுக் குடும்பமுறை­யின் அவ­சி­யத்தை இப்­ப­டம் வலி­யு­றுத்­தும். தற்­போது நாம் இழந்து கொண்டு இருக்­கும் அற்­பு­தம் இது. தனித்­து­வி­டப்­பட்ட மனி­தர்­க­ளா­லும் கட்­டுப்­பா­டற்ற சுதந்­தி­ரத்­தா­லும்­தான் குற்­றங்­களும் மன­நோ­யா­ளி­களும் தற்­கொ­லை­களும் பெருகி வருகிறது,” என்­கி­றாா் கதிர்­வேலு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!