சாக்‌ஷி: கிண்டல்களைப் பொருட்படுத்தவே கூடாது

சிறு வய­தில் உடல் பெருத்­தி­ருந்த தம்­மைப் பல­ரும் கிண்­டல் செய்­வார்­கள் என்று சாக்‌ஷி அகர்­வால் தெரி­வித்­துள்­ளார்.

தற்­போது ‘சின்ட்­ரெல்லா’, ‘டெடி’ உள்­ளிட்ட படங்க­ளில் நடித்­து­வ­ரும் இவர், அண்­மை­யில் தாம் பள்­ளி­யில் படித்­த­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களை டுவிட்­ட­ரில் பகிர்ந்­துள்­ளார்.

அச்­ச­ம­யம் சக மாண­வர்­கள் இவரை குண்டு பூச­ணிக்­காய் என்று கிண்­டல் செய்­வார்­க­ளாம்.

“இத்­த­கைய கிண்­டல்­களை நான் பொருட்­ப­டுத்­தி­யதே இல்லை. படிப்­பில் மட்­டுமே ஆர்­வம் காட்­டி­னேன்.

“இப்­போ­தும் என்­னைப் பற்றி விமர்­சிப்­ப­வர்­க­ளை­யும் கிண்­ட­ல­டிப்­ப­வர்­க­ளை­யும் நான் கண்­டு­கொள்­வதே இல்லை.

“இதைத்­தான் நடி­கர் விஜய்­யும் திரை­யில் தோன்றி அறி­வு­றுத்தி உள்­ளார்,” என்­கி­றார் சாக்‌ஷி.