மீண்­டும் இன்ஸ்­ட­கி­ராம் தளத்­தில் திரிஷா

‘ஆடிய கால்­களும் பாடிய வாயும் சும்மா இருக்­காது’ என்­ப­தாக இருக்­கிறது திரிஷா­வின் கதை. இதோ மீண்­டும் இன்ஸ்­ட­கி­ராம் தளத்­தில் செயல்­ப­டத் தொடங்­கி­விட்­டார்.

கவர்ச்­சி­க­ர­மான கருப்பு ஆடை அணிந்து, தேக­மெல்­லாம் நீர்த்­துளி­கள் ஒட்­டிக்­கொண்­டி­ருக்­கும் தனது படத்தை திரிஷா வெளி­யிட ரசி­கர்­கள் சிலிர்த்­துப் போயி­ருக்­கி­றார்­கள்.

“சமூக வலைத்­த­ளங்­கள் என்­பன ஒரு­வித போதை. அதி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக வில­க­வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது. சிறிது ஓய்வு தேவை. மீண்­டும் தகுந்த நேரத்தில் சமூக வலைத்­த­ளங்­களில் இயங்­கத் தொடங்­கு­வேன்,” என்று சில வாரங்­க­ளுக்கு முன்­பு­தான் அறி­வித்­தி­ருந்­தார் திரிஷா.

அவர் சொன்ன காலம் இவ்­வ­ளவு சீக்­கி­ரம் வரும் என ரசி­கர்­கள் எதிர்­பார்க்­க­வில்லை. இவ­ரது வரு­கையை நடி­கை­யும் நிகழ்ச்­சித் தொகுப்­பா­ள­ரு­மான ரம்யா, கன்­னட நடிகை நயனா உள்­ளிட்­டோர் உட­னுக்­கு­டன் வர­வேற்­றுள்­ள­னர்.

ரசி­கர்­களும் பல­வி­த­மாக தங்­கள் அன்பை வெளிப்­ப­டுத்த, அதைக்­கண்டு திரிஷா நெகிழ்ந்து போயி­ருந்த வேளை­யில் ‘பிக்­பாஸ்’ புகழ் நடிகை மீரா மிதுன் ஒரு சர்ச்­சை­யைக் கிளப்பி விட்­டுள்­ளார்.

அதா­வது திரிஷா தன்னை எல்லா வகை­யி­லும் காப்­பி­ய­டிக்­கி­றார் என்­ப­து­தான் மீரா­வின் குற்­றச்­சாட்டு.

இது­தொ­டர்­பாக அவர் தமது சமூக வலைத்­த­ளத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

“எனது சிகை­ய­லங்­கா­ரம், ஒப்­பனை செய்­யும் விதம், கவர்ச்சி பாணி என எல்­லா­வற்­றை­யும் திரிஷா தொடர்ந்து பின்­பற்றி வரு­கி­றார். இது­தான் அவ­ருக்கு நான் விடுக்­கும் கடைசி எச்­ச­ரிக்கை. மீண்­டும் ஒரு­முறை என்­னைப்­போல் காட்­சி­ய­ளிக்க வேண்­டும் என அவர் முயற்­சி செய்தால் சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுப்­பேன்,” என்­பதே மீரா மிதுன் விடுத்­துள்ள எச்­ச­ரிக்கை.

திரிஷா கணினி உத­வி­யோடு தனது புகைப்­ப­டங்­களில் சில மாற்­றங்­க­ளைச் செய்­வ­தன் மூலம் தன்­னைப்­போல் காட்­சி­ய­ளிப்­ப­தாக மீரா சொல்­கி­றார். தொடர்ந்து தனது பாணியை திரிஷா பின்­பற்­று­வ­து­தான் இவ­ருக்­குக் கோபத்தை ஏற்­ப­டுத்­து­கி­ற­தாம்.

“நீங்­கள் என்ன செய்­து­கொண்­டி­ருக்­கி­றீர்­கள் என்­பது உங்­கள் மன­சாட்­சிக்­குத் தெரி­யும். எனவே, மாறுங்­கள்,” என்று மீரா மிதுன் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் ரசி­கர்­கள் அவ­ருக்கு எதி­ராக கொந்­த­ளித்­துள்­ள­னர். கடந்த இரு­பது ஆண்­டு­க­ளாக தமிழ்ச் சினி­மா­வில் அசத்­திக் கொண்­டி­ருக்­கும், தனி நாய­கி­யாக நடித்­து­வரும் திரி­ஷாவை நேற்று வந்த மீரா மிதுன் விமர்­சிப்­பதை நினைத்­தால் சிரிப்­பு­தான் வருகிறது என்று பலர் கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­தக் குற்­றச்­சாட்டு தொடர்­பாக திரிஷா தரப்­பில் இருந்து எந்த பதி­ல­டி­யும் இது­வரை வர­வில்லை. எனி­னும் திரிஷா இதை­யெல்­லாம் கண்­டு­கொள்­வ­தாக இல்­லை­யாம். பதி­லுக்­குப் பதில் பேசு­வ­தால் தமக்கு எந்த வகை­யி­லும் லாபம் இல்லை என்­ப­து­டன், தாம் விளக்­கம் அளித்­தால் அது மீரா­வுக்­கு­த்தான் இல­வச விளம்­ப­ர­மாக அமை­யும் என்­றும் கரு­து­கி­றா­ராம் திரிஷா.

இதற்­கி­டையே, திரி­ஷாவை அடுத்து இளம் நாயகி ராஷி கண்ணா­வுக்­கும் ஒரு நடிகை கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார். அவர் ராம்­கோ­பால் வர்­மா­வின் ‘மேக் டு’ படத்­தில் நடித்த ஸ்வீட்டி.

கதா­நா­ய­கி­யாக நடிப்­ப­தற்கு முன்பு சில படங்­களில் ஆடை வடி­வ­மைப்­பா­ள­ரா­க­வும் பணி­யாற்றி உள்­ளார். இந்­நி­லை­யில் ‘சுப்­ரீம்’ என்ற படத்­தில் பணி­யாற்­றி­ய­போது அதி­காலை 3 மணிக்கு பணிக்கு வரு­மாறு படக்­குழு அழைத்­த­தாம்.

“அந்­தப் படத்­தில் ராஷி­தான் நாயகி. அவ­ருக்­குப் புடவை கட்­டி­விட வேண்­டும் என்று சொல்லி உடனே வரு­மாறு கேட்­டுக் கொண்­ட­னர். நீண்­ட­தூ­ரம் பய­ணம் செய்து படப்­பி­டிப்பு தளத்தை அடைந்­த­போது பல மணி நேரம் காக்க வைத்­தார் ராஷி.

“அவர் பல­முறை என்னை இவ்­வாறு காக்க வைத்து எனது சுய­ம­ரி­யா­தை­யைச் சீண்­டிப் பார்த்­துள்­ளார். இத்­த­கைய போக்கு மாற­வேண்­டும்,” என்று கொந்­த­ளித்­துள்­ளார் ஸ்வீட்டி.

அவ­ரது இந்­தக் குற்­றச்­சாட்டை ராஷி தரப்பு திட்டவட்டமாக மறுத்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. திரை­யு­ல­கைச் சேர்ந்த அனை­வ­ருக்­கும் தாம் மரி­யாதை அளித்து, அன்பு பாராட்டி வரு­வ­தாக ராஷி கண்ணா கூறு­கி­றா­ராம். அவ­ரது ரசி­கர்­கள் பலர் ஸ்வீட்­டியை சமூக வலைத்­த­ளங்­களில் கடு­மை­யாக விமர்­சித்­து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!