‘நிச்சயம் சிரிக்க வைக்கும்’

ஜி.வி பிர­காஷ் நடிப்­பில் உரு­வாகி இருக்கும் 'வணக்கம்டா மாப்ள' படம் திரை­ய­ரங்க வெளியீட்­டீற்­காக காத்­திருக்கா­மல் நேர­டி­யாக தொலைக்­காட்­சி­யில் வெளி­யா­கிறது.

தமி­ழ­கத்­தின் தேனி மாவட்­டத்­தைச் சேர்ந்த ஒரு­வர் 'டிக்­டாக்' செயலி மூலம் அவ்­வப்­போது சில காணொ­ளி­களை வெளி­யி­டு­வா­ராம். அவர் அடிக்­கடி சொல்­லும் 'வணக்­கம்டா மாப்­ள' என்பது அவ்­வட்­டா­ரத்­தில் ரொம்ப பிர­ப­லம். அதையே தலைப்­பாகத் தேர்ந்­தெ­டுத்­த­தா­கச் சொல்­கி­றார் படத்­தின் இயக்­கு­நர் ராஜேஷ்.

"இரு நண்­பர்­க­ளுக்கு இடையே நடக்­கும் கதை இது. இரு­வ­ருமே காதல் வலை­யில் விழு­கி­றார்­கள். இரு­வ­ரும் காத­லிக்­கும் பெண்­க­ளைக் கைப்பி­டித்­த­னரா என்­ப­தைக் கல­க­லப்­பாகச் சொல்­லி­யி­ருக்­கி­றோம்.

"ஜி.வி. பிர­கா­ஷின் பெற்­றோ­ராக ஜெய­பி­ர­காஷ், பிர­கதி நடித்­துள்­ள­னர். 'பிகில்' படம் மூலம் ரசி­கர்­க­ளின் மன­தைக் கவர்ந்த அமிர்தா ஐயர் நாய­கி­யாக நடித்­துள்­ளார்.

"அவ­ரது நடிப்பு நன்கு மெரு­கேறி உள்­ளது. தமி­ழில் நிச்­ச­யம் ஒரு வெற்றி வலம் வரு­வார்.

"ஏற்­கெ­னவே தெலுங்கு ரசி­கர்­கள் இவரை பெரி­தும் பாராட்டி வரு­கின்­ற­னர். மிக விரை­வில் தமிழ் ரசி­கர்­கள் மன­தி­லும் நல்­ல­தொரு இடம் பிடிப்­பார்.

"மேலும் ஆனந்­த­ராஜ், எம்.எஸ். பாஸ்­கர், டேனி­யல் என்று பெரிய நகைச்­சு­வைப் பட்­டா­ளத்­தையே கள­மி­றக்கி உள்­ளோம்," என்­கி­றார் இயக்­கு­நர் ராஜேஷ்.

வழக்­க­மாக இவ­ரது படங்­க­ளின் இறு­திக் காட்­சி­யில் ஜீவா, ஆர்யா விஷால் என யாரே­னும் முன்­னணி நாய­கன் திடீ­ரென தோன்­று­வார். மேலும் அந்த நாய­கர்­கள் நகைச்­சு­வை­யாக வச­னங்­க­ளைப் பேசி, ரசி­கர்­களை மகிழ்­வித்து படத்தை நல்­ல­வி­த­மாக முடித்து வைப்­பார்­கள்.

அதே­போன்ற காட்­சி­கள் இந்­தப் புதுப்­ப­டத்­தி­லும் உள்­ள­ன­வாம். நாய­க­னாக நடிப்­ப­து­டன் இப்­ப­டத்­துக்கு இசை­ய­மைக்­கும் பணி­யை­யும் ஏற்­றுள்­ளார் ஜி.வி. 'அசு­ரன்', சூர­ரைப் போற்று' என கடந்த ஆண்டு இசை­ய­மைப்­பில் அசத்­தி­ய­வர், இந்­தப் படத்­துக்­கா­க­வும் நான்கு அரு­மை­யான பாடல்­களை வழங்­கி­யுள்­ளா­ராம்.

"ஊர­டங்­கின்­போது நிறைய ஓய்வு கிடைத்­தது. அத­னால் எனது குழு­வி­னர் இல்­லா­மல் நான் மட்­டுமே தனி­யாக அமர்ந்து சில கதை­களை உரு­வாக்­கி­னேன்.

"குடும்­பத்­து­டன் கண்டு ரசிக்­கும்­படி ஒரு படத்தை எடுக்­க­வேண்­டும் என்ற எண்­ணம் தோன்­றி­யது.

"கதையை முடித்து சில மாதங்­க­ளுக்­குப் பிறகு தயா­ரிப்­புத் தரப்பை சந்­தித்­துக் கதை சொன்­ன­போது மிக நன்­றாக இருப்­ப­தாக தெரி­வித்­த­னர். எனவே தமிழ்ப் புத்தாண்டன்று வெளி­யி­ட­லாம் என்று முடிவு செய்து கடந்த டிசம்­பர் மாதம் படப்­பி­டிப்­பைத் துவங்­கி­னோம்.

"அனைத்­தை­யும் திட்­ட­மிட்­ட­படி செய்ய முடிந்­த­தால் குறித்த நேரத்­தில் படம் வெளி­யா­கிறது," என்­கி­றார் எம். ராஜேஷ்.

பண்­டிகை சம­யத்­தில், நேர­டி­யா­கத் தொலைக்­காட்­சி­யில் வெளி­யீடு காண்­ப­தால் பெரும்­பா­லான சினிமா ரசி­கர்­களை இப்­ப­டம் சென்­ற­டை­யும் என படக்­கு­ழுத் தரப்­பில் நம்­பிக்கை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தப் படத்­தில் ஜி.வி. பிர­கா­சின் பங்­க­ளிப்பு மிக முக்­கி­ய­மா­னது என்று குறிப்­பி­டு­ப­வர், அவ­ரைப். போன்று பல்­வேறு திற­மை­கள் கொண்ட இளை­யர்­கள் திரைத்­து­றைக்கு பெரும் பல­மாக உள்­ள­னர் என்­கி­றார்.

"அனு­பவ இயக்­கு­நர்­க­ளின் படங்­களில் நடித்த பிறகு ஜிவி.பிர­காஷ் ஒரு நடி­க­ராக நன்கு பக்­கு­வப்­பட்­டுள்­ளார். அவ­ரி­டம் பெரும் முன்­னேற்­றம் காணப்­ப­டு­கிறது.

"'கட­வுள் இருக்­கான் குமாரு' படத்­துக்­குப் பிறகு இரு­வ­ரும் இணைந்­துள்­ளோம். அப்­போது நான் பார்த்த ஜி.வி.க்கும் இப்­போது பார்க்­கும் ஜி.வி.க்கும் இடை­யில் பல நல்ல மாற்­றங்­கள் தென்­ப­டு­கின்­றன.

"அனைத்து வச­னங்­க­ளை­யும் அழ­காக மனப்­பா­டம் செய்து பக்­கு­வ­மான நடிப்பை வெளிப்­படுத்­து­கி­றார். ஒரே 'டேக்'கில் அவர் காட்­சி­களை முடிப்­ப­தைக் கண்டு நானே அசந்து போனேன்.

"இப்­போ­துள்ள கவ­லைக்­கு­ரிய கொரோனா சூழ்­நி­லை­யில் இந்­தப் படம் அதை எல்லாம் மறந்து ரசி­கர்­களை மனம்­விட்­டுச் சிரிக்கவைக்கும். அவர்க­ளு­டைய மனதை லேசாக்­கும் என்­பது மட்­டும் உறுதி," என்று உத்­த­ர­வா­தம் தரு­கி­றார் இயக்­குநர் எம். ராஜேஷ்.

, :   

அமிர்தா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!