பேரம் பேசி மாட்டிக்கொண்ட நயன்தாரா

நயன்­தாரா தற்­பொ­ழுது ஓர் இந்­திப் படத்­தில் நடித்­துக்கொண்­டி­ருக்­

கி­றார். அத­னால் அவ­ரும் விக்­னேஷ் சிவ­னும் மும்­பை­யில் தங்கி இருக்­கின்­ற­னர்.

நேற்று முன்­தி­னம் இரு­வ­ரும்

அங்­கி­ருக்­கும் சித்தி விநா­ய­கர் கோவி­லுக்­குச் சென்­றி­ருக்­கின்­ற­னர். இரு­வ­ரும் சாமி தரி­ச­னம் முடிந்த பிறகு எடுத்த படங்­களை விக்­னேஷ் சிவன் தன்­னு­டைய இன்ஸ்­ட­கி­ரா­மில் பதி­விட்­டி­ருந்தார்.

அந்­தப் படத்­தில் நயன்­தாரா உடல் மெலிந்து, கன்ன எலும்பு தெரி­யும் அள­விற்கு கன்­னம் ஒட்­டிப்­போய் காணப்­பட்­ட­தைப் பார்த்த அவ­ரு­டைய ரசி­கர்­கள், "தலை­விக்கு என்ன ஆனது? எங்­கள் தலை­வியை

எப்­போது திரு­ம­ணம் செய்­வீர்­கள் இயக்­கு­நரே," என்று கவ­லை­யு­டன் கேட்டு பதி­விட்­டிருந்தனர்.

படங்களுடன் அவர் கோவி­லி­

லி­ருந்து வெளியே வந்­த­தும் சாலை­யோ­ரக் கடை­யில் ஒரு பையை பேரம் பேசி வாங்­கி­யி­ருக்­கி­றார். அந்­தக் காணொ­ளி­யும் வலைத்­த­ளத்­தில் வெளி­யா­னது.

அதைப் பார்த்த அவ­ரின் ரசி­கர்­கள், "தலைவி பேரம் பேசும் அழகே அழகு," என்று பதி­விட்­டி­ருந்­த­னர்.

ஒரு சிலர், "கோடி­களில் சம்­ப­ளம் வாங்­கும் நயன்­தாரா சாலை­யோ­ரக் கடை­யில் பேரம் பேசு­கி­றார். இதுவே விலை­யு­யர்ந்த பைகளை விற்­கும் வணிக வளா­கங்­க­ளாக இருந்­தால் பேரம் பேசா­மல் சொல்­லும் விலைக்கு வாங்­கு­வார். ஏழை­யி­டம்­தான் பேரம் பேசு­வார்கள்," என்று கண்­டித்­தும் பதி­விட்­டி­ருக்­கின்­ற­னர்.

இவர் ரஜி­னி­காந்­து­டன் இணைந்து நடித்­தி­ருக்­கும் 'அண்­ணாத்த' படம் நவம்­பர் 4ஆம் தேதி திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கிறது. அத­னைத் தொடர்ந்து இவர் தன் காத­ல­ரின் இயக்­கத்­தில் 'காத்து வாக்­குல ரெண்டு காதல்' படத்­தில் நடித்து முடித்­தி­ருக்­கி­றார். அந்­தப் படத்­தில் நயன்­தா­ரா­வின் தங்­கை­யாக சமந்தா நடித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!