‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’யாக நடிக்கும் வனிதா

நடிகை வனிதா விஜ­ய­கு­மார் ‘தில்லு இருந்தா போராடு’ என்ற தலைப்­பில் உரு­வா­கும் படத்­தில் பெண் ரவுடி வேடத்­தில் நடிக்­கி­றார். இப்­படத்தை கே.முர­ளி­த­ரன் இயக்­கு­கி­றார்.

மேலும், இந்­தப் படத்­தில் அவருக்கு ‘வைரல் ஸ்டார்’ என்ற பட்டத்தை­யும் கொடுத்­துள்­ள­னர்.

பட வாய்ப்­பு­கள் இல்லை என்­றா­லும், இணைய ஊட­கங்­கள் மூலம் தன்­னைப் பற்­றிய பர­ப­ரப்­பான செய்­தி­கள் தொடர்ந்து வெளி ­வ­ரு­மாறு பார்த்­துக்­கொள்­கி­றார் வனிதா.

பட்­டப்­ப­டிப்பு படித்­துள்ள கிரா­மத்­தைச் சேர்ந்த பாண்­டிக்கு எங்கு கேட்­டும் வேலை கிடைக்­க­வில்லை. அவ­னுக்கு பிரியா என்ற காதலி கிடைக்­கி­றாள்.

இந்­நி­லை­யில், பல அவ­மா­னங்­களைச் சுமக்­கும் பாண்டி, மதுப்­பழக்­கத்­துக்கு அடி­மை­யா­கி­றான்.

இத­னால் கோப­ம­டை­யும் அவ­னது தாய், மகனை வீட்டை விட்டு விரட்­டு­கி­றாள். அதன் பிறகு அவ னது நட­வ­டிக்­கை­கள் முற்­றி­லும் மாறு­கிறது.

பஞ்­சா­யத்து பர­மேஸ்­வரி என்ற பெண் தாதா­வின் உதவி கிடைக்­கிறது. அத­னால் மெல்ல காலூன்­றும் வேளை­யில், புதுப் பிரச்­சினை­கள் தலை­தூக்­கு­கின்­றன.

இதில் பஞ்­சா­யத்து பர­மேஸ்வரி­கதாபாத்திரத்தில் நடிக்­கி­றார் வனிதா. இந்­தக் கதையை விறு­வி­றுப்­பான திரைக்­க­தை­யு­டன் வழங்க உள்­ளோம். அதனால் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும்,” என்­கி­றார் முர­ளி­த­ரன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!