குத்தாட்டத்தில் கவனம் செலுத்தும் சமந்தா

அல்லு அர்­ஜுன் நடிப்­பில் வெளி­வந்த படம் 'புஷ்பா'. இந்தப் படத்தில் ராஷ்­மிகா நாய­கி­யாக நடித்­தி­ருந்­தார். அவர் இந்­தப் படத்­திற்காக காட்­டி­லும்

மேட்­டி­லும் கஷ்­டப்­பட்டு நடித்­தி­ருந்­தாலும் அந்­தப் படத்­தில் ஐந்து நிமி­டங்­கள் மட்­டும் வந்து

பெய­ரைத் தட்­டிச் சென்­று­விட்­டார் சமந்தா.

சுகு­மார் இயக்­கிய 'புஷ்பா' படத்­திற்கு தேவி ஸ்ரீ பிர­சாத் இசை­ய­மைத்­தி­ருந்­தார். உல­கம்

முழு­வ­தும் பல மொழி­களில் வெளி­யான இப்­ப­டம் கல­வை­யான விமர்­

ச­னங்­க­ளைப் பெற்­றா­லும் வசூலை வாரிக் குவித்­தது.

குறிப்­பாக இப்­ப­டத்­தில்

பர­ப­ரப்­பாகப் பேசப்­பட்ட ஒரு விஷ­யம் சமந்தா ஆடிய

'ஓ சொல்­றியா' பாடல்­தான். இது­வரை

இல்­லாத கவர்ச்­சி­யில் சமந்தா ஆடிய இந்தப் பாடல் பெரும் அதிர்­

வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது.

ஒரு பக்­கம் பல

சர்ச்­சை­கள் எழுந்­தா­லும் மறு­பக்­கம் அப்­பா­ட­லுக்கு அமோக வர­வேற்பு கிடைத்­தது. அந்­தப் பாட­லுக்­கா­கவே பலர் மீண்­டும் மீண்­டும் அப்­ப­டத்தை பார்த்­த­னர் என்­றுகூட சொல்­ல­லாம்.

அந்த அள­விற்கு இளை­ஞர்­கள் மத்­தி­யில்

பிர­ப­ல­ம­டைந்­தது

'ஓ சொல்­றியா மாமா' பாடல். மேலும்

அப்­பா­ட­லுக்­காக சமந்தா ஐந்து கோடி­வரை

சம்­ப­ள­ம் வாங்­கி­யுள்­ள­தாக தக­வல்­கள் வெளி

வந்­துள்­ளன.

இந்­நி­லை­யில் சமந்­தா­வின் நட­னத்­திற்கு திரை­யு­ல­கில் அதிக கிராக்கி ஏற்­பட்­டுள்­ளது. பல படங்­களில் 'ஓ சொல்­றியா' பாடல்­போல ஒரு பாட­லுக்கு நட­ன­மாட கேட்டு வரு­கின்­ற­னர்.

இதை­ய­டுத்து விஜய் தேவ­ர­கொண்டா நடிப்­பில் மிகப் பிரம்­மாண்­ட­மாக உரு­வா­கி­வ­ரும் 'லிகர்' படத்­திலும் ஒரு பாட­லுக்கு சமந்­தாவை ஆடச்­சொல்லி படக்­குழு அணு­கி­யது.

ஒரு சில மணி­நேர உழைப்­புக்கு அதிக

சம்­ப­ளம் கிடைப்­ப­தால் சமந்­தா­வும் இப்­ப­டத்­தில் ஆட ஒப்­புக்­கொண்­டுள்­ளா­ராம்.

'புஷ்பா' படத்­தில் இடம்­பெற்ற 'ஓ சொல்­றியா' பாடலைப் போன்றே இப்­பா­ட­லையும் எடுக்கப் போவதாக சொல்­கின்றனர் 'லிகர்' படக் குழுவினர். எனவே இதைப் ­பற்­றிய

அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு விரை­வில் வெளி­யா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அண்­மை­யில் சமந்தா சுவிட்­சர்­லாந்து நாட்­டுக்குச் சுற்­றுலா சென்ற புகைப்­ப­டங்­க­ளை­யும் காணொ­ளி

­க­ளை­யும் தனது சமூக வலைத்­தள பக்­கத்­தில் பதி­விட்டு இருந்­தார்.

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் பனிச்­ச­றுக்கு செய்­யும் காணொ­ளி­யை­யும் பகிர்ந்­தி­ருந்­தார் சமந்தா. அந்­தக் காணொளியை அவ­ரது

ரசி­கர்கள் பெரு­ம­ள­வில் பகிர்ந்து வந்­த­னர். இந்­நி­லை­யில், தற்­போது இறுக்­க­மான ஜீன்ஸ் அணிந்து கறுப்பு நிற மேல் சட்­டை­யு­டன் பால்­க­னி­யில் நின்­ற­வாறு இருக்­கும் புகைப்­ப­டம் ஒன்றைப் பகிர்ந்­துள்­ளார். இந்த புகைப்­

ப­டம் சமூக வலை­த்த­ளங்­களில் பரவலாகப் பகிரப்படுவதுடன் சில மணி நேரங்­களில் 16 லட்­சத்­துக்­கும் அதி­க­மான விருப்பங்களைப் பெற்­றுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

தன்னுடைய வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எரிந்துவிட்டு தனது இலக்கை நோக்கி வெற்றிநடை போட்டு வருகிறார் சமந்தா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!