‘என் நடிப்பில் ரஜினியின் சாயல் இருக்கும்’

தமது நடிப்­பில் ரஜி­னி­யின் சாயல் இருக்­கும் என்று சிவ­கார்த்­தி­கேயன் கூறி­யுள்­ளார்.

கௌதம் கார்த்­திக் நாயகனாக நடித்­துள்ள ‘1947 ஆகஸ்ட் 16’ படத்­தின் இசை வெளி­யீட்டு விழா சென்­னை­யில் நடைபெற்றது. இதில் சிவ­கார்த்­தி­கே­யன் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு பேசி­னார்.

“எனக்கு நடி­கர் கார்த்­திக்கை மிகவும் பிடிக்­கும். அவர் மிக­வும் இனி­மை­யா­ன­வர். கௌதம் கார்த்­திக்கைச் சந்­தித்த பல ஆண்­டு­களுக்­குப் பிற­கு­தான் கார்த்­திக் சாரை சந்­தித்­தேன்.

“அவர் மிக அழ­கான நடி­கர். அதை­விட பிடித்­த­மான விஷ­யங்­கள் அவ­ரி­டம் உள்­ளன. கார்த்திக்­கி­டம் எந்­த­வொரு நடி­க­ரின் சாயலும் இருக்­காது.

“மற்ற நடி­கர்­க­ளின் நடிப்­பைப் பார்க்­கும்­போது வேறு யாரே­னும் ஒரு­வ­ரது சாயல் தென்­படும். உதா­ர­ண­மாக, எனது நடிப்­பில் ரஜி­னி­யின் சாய­லைக் காண முடி­யும்,” என்­றார் சிவ­கார்த்­தி­கேயன்.

தாம் ரஜி­னி­யின் தீவிர ரசி­கன் எனப் பல மேடை­க­ளி­லும் பேட்டி­களி­லும் ஏற்­கெ­னவே குறிப்­பிட்டுள்­ளார் சிவா.

இந்நிலையில், முதன்­மு­றை­யாக தனது நடிப்­பில் நடிகர் ரஜி­னி­யின் சாயல் தென்­படும் என்று அவர் வெளிப்­ப­டை­யா­கப் பேசி­யுள்­ளார்.

 

 இயக்குநர் சங்கரின் 15வது படத்துக்கு ‘கேம் சேஞ்சர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ‘இந்தியன் 2’ சங்கரின் 14வது படமாக உருவாகிறது. இந்நிலையில் தெலுங்கு முன்னணி நாயகன் ராம்சரணை வைத்து தனது 15வது படத்தை இயக்கி வருகிறார் சங்கர். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட உள்ளனர். இதில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். அஞ்சலி, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், சுனில் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அதிக பொருட்செலவில் தயாராகிறது. பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!