பாரதியாரைப் பற்றி பறைசாற்றும் ‘பாரதி யார்?’ இசை நாடகம் 

இயல், இசை, நடனம் என முத் தமிழ்ச் சுவையுடன் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் வாழ்க்கை யை எடுத்துக்கூறும் 'பாரதி யார்?' இசை நாடகம் சிங்கப்பூரில் அரங் கேறவுள்ளது.
தமிழகத்தின் 'எஸ்பி கிரியே ஷன்ஸ்' குழு படைக்கும் இந் நிகழ்ச்சி, நாளை சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு பிஜிபி அரங்கில் நடைபெறும்.
"மகாகவி பாரதியாரின் கொள் கைகள், வாழ்க்கை அனுபவங்கள், அவரின் சுதந்திரப் போராட்ட முயற்சிகள் போன்றவற்றை விளக் கும் இந்த நாடகம் அனைவரையும் கவரும்," என்று கூறினார் பாரா தியார் வேடத்தில் நடிக்கும் சொற் பொழிவாளர் இசைக்கவி ரமணன்.
வீணைக் கலைஞர், இயக்குநர், நடிகர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட மறைந்த எஸ். பாலச் சந்தரின் மகன் எஸ்.பி.எஸ். ராமன் இயக்கும் இந்நாடகம் தமி ழகத்திலும் வெளிநாடுகளிலும் மேடையேற்றப்பட்டு பலரது பாராட் டுகளையும் பெற்றுள்ளது.
திரு ராமனின் மகன் பரத்வாஜ் ராமன் இசையமைத்திருக்கிறார்.
கர்நாடக சங்கீத வித்வான் விஜய் சிவா, டி.என்.எஸ். ரங்க நாதன், சன் டிவி புகழ் ஸ்ரீகணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நாடகத்தின் வசனத்தை இசைக்கவி ரமணன் எழுதியுள் ளார். செல்லம்மா பாரதி, வ.உ.சி, யதுகிரி அம்மாள், தங்கம்மாள், இரா.கனகலிங்கம், வ.ரா. சீனி விசுவநாதன், ரா.அ. பத்மநாபன், இலந்தை ராமசாமி போன்றோர் பதிவு செய்திருந்த அதிகாரபூர்வ மான தகவல்களைக் கொண்டு இந்நாடகத்தின் கதையை அமைத் துள்ளார் இசைக்கவி ரமணன்.
பாரதியின் 10ஆம் வயதிலிருந்து அவர் வாழ்கையில் நடந்த முக்கிய மான சம்பவங்களைத் தொகுத்து வழங்குகிறது இந்நாடகம்.
நாடகத்திற்காக தமிழகத்தி லிருந்து சிங்கப்பூர் வந்துள்ள கலைஞர்கள் கடந்த ஒரு வாரமாக நாடக ஒத்திகை செய்து வருகின் றனர். பிரபல இசைக் கலைஞர்கள் குரலில் பதிவான பாடல்களுடன் நேரடி இசையும் உண்டு.
பாரதியாரின் புகழை இளைய தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வும், மூத்த தலைமுறைக்குப் பழைய நினைவுகளைக் கொடுக் கவும் தயாரிக்கப்பட்டுள்ளது 'பாரதி யார்?'
இந்த நாடகத்தை தமிழ்மொழி விழாவை ஒட்டி லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் வழங்குகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!