தினமும் 20,000 பேருக்கு இலவச உணவு

புனித ரம­லான் மாதத்­தில் நோன்பு துறப்­ப­தற்­காக தின­மும் 20,000 பேருக்கு உணவு வழங்க முனைந்­துள்­ளது #எஸ்­ஜி­ யு­னை­டெட் புக்கா புவாசா திட்­டம்.

இத்திட்டம் மூலம் சுகா­தாரப் பரா­ம­ரிப்புத் துறை ஊழி­யர்­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்­கும் வசதி குறைந்தோருக்கும் இல­வச உண­வு வழங்­கப்­படும்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்றை எதிர்த்துப் போரா­டும் முதல்நிலை சுகா­தாரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளோடு ஒரு­மைப்­பாடு காட்­ட­வும் நன்றி கூறும் நோக்­கத்­தி­லும் இந்த முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

“மற்­ற­வர்­க­ளின் நோன்பு துறப்­புக்கு நன்­கொடை வழங்­கு­வது முஸ்­லிம்­க­ளி­டையே பாராட்­டுக்­கு­ரிய ஒரு செய­லாக கரு­தப்­ப­டு­கிறது. ஒவ்­வொரு ரம­லான் மாத­மும் நமது பள்­ளி­வா­சல்­களில் சமூக நோன்பு துறப்பை ஏற்­பாடு செய்ய நன்­கொ­டை­ அதிகம் வழங்கப்படும்,” என்­றார்

சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றத்­தின் (முயிஸ்) தலைமை நிர்­வா­கி­யான திரு ஈசா மசூத்.

இவ்வாண்டு ரம­லான் மாதத்தில் ­பள்­ளி­வா­சல்­கள் மூடப்­பட்­டுள்­ளன என்றும் நெருக்­க­டி­நி­லை­யில் அவ­தி­யுறு­வோ­ருக்­கு உத­வும் இந்த அர்த்­த­முள்ள திட்­டத்­தில் ஈடு­படுவதாகவும் கூறி­னார் திரு ஈசா.

‘#எஸ்­ஜி­யு­னை­டெட் புக்கா புவாசா’ திட்­டம் உள்­ளூர் தொழில்­க­ளுக்­கும் சுகா­தார பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­கும் ஆத­ரவு வழங்க $3 மில்­லி­யன் நன்­கொடை திரட்­டும் நோக்­க­மும் கொண்­டுள்­ளது. இத்­திட்­டத்­தின் உணவு தயா­ரிப்­பா­ளர்களுக்­கும் விநி­யோ­கிப்­பா­ளர்

களுக்­கும் இந்­தப் பணம் வழங்­கப்­படும். இந்­தத் தொகை சிங்­கப்­பூர் மலாய் வர்த்­தக, தொழிற் சபை­யால் (எஸ்­எம்­சி­சிஐ) பட்­டு­வாடா செய்­யப்­படும்.

“உணவு, பானத் துறை­யில் எதிர்­பா­ராத சவால்­களை எதிர்­நோக்­கும் பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து எஸ்­எம்­சி­சிஐ ஈடு­ப­டு­வது இந்­தத் திட்­டத்­திற்கு மேலும் அர்த்­தம் சேர்க்­கிறது,” என்­றார் ‘எஸ்­எம்­சி­சிஐ’யின் நிர்­வாக இயக்­கு­நர் திரு அஸ்­ருல் நிஸாம் ‌‌‌ஷா சொஹைமி.

இந்­தத் திட்­டத்­திற்கு முயிஸ் $1 மில்­லி­யன் நன்­கொ­டையை வழங்­கி­யுள்­ளது. ‘ரஹ்மதன் லில் ஆலமீன்’ அற­நி­று­வ­னம் (ஆர்­எல்­எஃப்) என்ற அமைப்பு ‘கிவிங்.எஸ்ஜி’ என்ற இணைய நன்­கொடை தளத்­தில் தேவைப்­படும் பணத்தைத் திரட்ட முயற்சி செய்து வரு­கிறது.

இந்த நன்­கொடை திரட்டு கடந்த மாதம் 17ஆம் தேதி தொடங்கி இம்­மா­தம் 23ஆம் தேதி வரை நீடிக்­கும். இது­வரை $607,000க்கும் மேலான தொகை இந்­தத் தளம் மூலம் திரட்­டப்­பட்­டுள்­ளது.

ஏறத்­தாழ 500 தொண்­டூ­ழி­யர்­கள் ஈடு­படும் இந்த திட்­டத்தை முயிஸ், பள்­ளி­வா­சல்­கள், ஆர்­எல்­எஃப், மக்­கள் கழ­கம், ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ குழு, எஸ்­எம்­சி­சிஐ ஆகிய அமைப்­பு­கள் ஒன்­று ­இணைந்து நடத்தி வரு­கின்­றன.

தின­சரி உணவு வேளை­க­ளுக்கு பதிவு செய்ய விரும்­பு­வோர் இத்­திட்­டத்­தின் இணை­யத்­த­ளத்­தில் அதைச் செய்­ய­லாம். இந்த உணவு 20 சமூக மன்­றங்­க­ளுக்­கும் 10க்கும் மேற்­பட்ட மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் வழங்­கப்­படும்.

அத்­து­டன் முயிஸ் அமைப்­பின் சாக்­காட் நிதி ஆத­ரவு திட்­டத்­தின் மூலம் பய­ன­டை­யும் இல்­லங்­க­ளுக்­கும் இந்த உணவு வழங்­கப்­படும்.

இத்­திட்­டத்­தைப் பற்றி பிர­த­மர் லீ சியன் லூங், அதி­பர் ஹலிமா யாக்­கோப், துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், சுற்­றுப்­புற, நீர்­வள அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி போன்ற தலை­வர்­கள் சமூக ஊட­கங்­களில் பதிவு செய்­தி­ருந்­த­னர்.

“வேலை இழந்­த­வர்­கள், குறிப்­பாக குறைந்த வரு­மா­ன­முள்ள குடும்­பங்­கள் உண­வின்றி தவிக்­கக்­கூ­டும் என்ற கவலை எனக்­கும் என் நண்­பர்­க­ளுக்­கும் உதித்­தது. அப்­போது ஏதா­வது திட்­டம் மூலம் மக்­க­ளுக்­குச் சேவை­ய­ளிக்­க­வேண்­டும் என்று முனைந்­தோம்.

“இரண்டே நாட்­களில் இதற்­கான திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. நண்­பர்­கள், இதர அமைப்­பு­க­ளின் உதவி பெருமளவு கிட்­டி­யது,” என்­றார் ரோசஸ் ஆஃப் பீஸ் அமைப்­பின் தலை­வ­ரும் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு முகம்­மது

இர்­ஷாத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!