இந்திய மரபுடைமை நிலையம் 6ஆம் முறையாக நடத்தும் ‘கல்சர்ஃபெஸ்ட் (CultureFest) கலாசார விழா முதல் முறையாக மெய்நிகர் முறையில் நிகழவிருக்கிறது.
இம்மாதம் 5ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நீடிக்கும் இவ்விழாவில் 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். ராமாயண காப்பியத்தைக் கருப்பொருளாக கொண்டு இந்த விழாவில் கலாசாரப் படைப்புகள், குழுக் கலந்துரையாடல்கள், பட்டறைகள், கதை சொல்லும் அங்கங்கள், சமையல் செயல்முறை விளக்கங்கள் ஆகியனவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 5) அன்று இந்திய கலைஞர் ராஜா ரவி வர்மாவின் ராமாயண ஓவியங்களை மையமாக்கி அப்சராஸ் ஆர்ட்ஸ் கலைக் குழு இணையம்வழி மேடையேற்றும் 'சீதா' நடனப் படைப்பாகும்.
முழு விவரங்களுக்கு https://www.indianheritage.org.sg/ta மற்றும் https://www.facebook.com/indianheritagecentre ஆகிய இணையத்தளங்களை நாடலாம்.