கொவிட்-19 சூழலிலும் சிறிதும் குன்றாத உற்சாக உணர்வு

வழக்கமாக பிரம்மாண்டத்துடன் நடந்தேறும் புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்தின் பொங்கல் கொண்டாட்டங்கள், கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலால் இம்முறை வித்தியாசமாக மெய்நிகர் பாணியில் நடத்தப்பட்டன. பொங்கலை முன்னிட்டு கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது. ஜனவரி 14ஆம் தேதி சமூக மன்ற உறுப்பினர்களும் இதர ஆதரவாளர்களும் இணைந்து ஒரு கூட்டுப் பொங்கல் சமையல் நிகழ்ச்சியை நடத்தி மெய்நிகர் பாணியில் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பினர். கிட்டத்தட்ட 500 பார்வையாளர்கள் இணையம்வழி கலந்துகொண்டனர்.

இம்மாதம் 17ஆம் தேதி கலை நிகழ்ச்சியுடன் ரத்த தான அங்கமும் இடம்பெற்றது. கிட்டத்தட்ட 90 பேர் ரத்த தானம் வழங்க முன்வந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

“புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் பொங்கல் திருவிழா எப்போதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது முக்கிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. இந்தியர்களும் அனைத்து இன குடியிருப்பாளர்களும் சேர்ந்து செழிப்பான கொண்டாட்டங்களையும் கலாசாரத்தையும் அனுபவிக்கிறார்கள்,” என்றார் திரு லியாங்.
திரு லியாங் இந்நிகழ்வு குறித்து அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

ஏற்பாட்டுக் குழுவிற்கும் குழுத் தலைவரான திரு மூர்த்திக்கும் நன்றி தெரிவித்தது உட்பட கிருமித்தொற்று காலத்திலும் பொங்கல் திருவிழாவின் பாரம்பரியத்தையும் மகிழ்ச்சிமிக்க உணர்வையும் பாதுகாப்பான, அர்த்தமுள்ள வழியில் கொண்டாடியது தமக்கு மகிழ்ச்சி தந்ததாகவும் அப்பதிவில் திரு லியாங் குறிப்பிட்டார்.
இதற்கிடையே புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்தில் பொங்கல் பானை வடிவமைப்பு, விளக்குகள், மாட்டு ஓவியங்கள் என அலங்கரிக்கப்பட்ட கண்காட்சி ஒன்று ஜனவரி 11 முதல் 21ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க அனைத்து விழா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன என்றும் 11 நாட்கள் நீடித்த கண்காட்சிக்கு ஏறத்தாழ 200 பேர் வந்தனர் என்றும் கூறினார் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு மூர்த்தி பெருமாள்.

“கிருமித்தொற்றுச் சூழலிலும் பொங்கல் உணர்வு மேலோங்கிய நிலையில் உள்ளது. நேரடியாக சென்று, வண்ணமய கண்காட்சியைப் பார்த்து கொண்டாட்டங்களில் திளைக்கும் வாய்ப்பை குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் நோக்கத்தில் இந்த ஏற்பாடுகளைச் செய்தோம்,” என்றார் திரு மூர்த்தி.

கிருமித்தொற்று இல்லாவிட்டால் நிகழ்ச்சி பன்மடங்கு பிரம்மாண்டத்துடன் நடந்திருக்கும் என்றும் தற்போதைய சூழலிலும் இந்த அளவிற்கு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருப்பது வியப்பளிக்கிறது என்றும் கூறினார் கடந்த 11 ஆண்டுகளாக புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் குடியிருக்கும் திருமதி சிதம்பரம் தமிழ்கொடி.
“ஒவ்வோர் ஆண்டும் நான் தவறாமல் சமூகப் பொங்கல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன். இம்முறை மாட்டுப் பொங்கல் தினத்தன்று கண்காட்சியைக் காண என் கணவருடன் வந்தேன்.

“அழகான தோரணம், அலங்காரங்களைக் கண்டு களித்தோம். பொங்கலுக்கு சிறப்பான பானை, கரும்பு, அடுப்பு வைத்த ஒரு வடிவமைப்பு ஆகியவை கண்களுக்கு விருந்தாக அமைந்தன. இது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது,” என்றார் திருமதி தமிழ்கொடி, 76.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!