நூற்றாண்டு களிப்பில் பிரபல நவீன உணவகம்

இர்­ஷாத் முஹம்­மது

பிரி­யாணி விற்­கும் நூற்­றுக்­க­ணக்­கான கடை­கள் சிங்­கப்­பூ­ரில் இருந்­தும் பலர் நினை­வுக்கு வரு­வது இஸ்­லா­மிக் உண­வ­கத்­தின் பிரி­யா­ணி­தான். தமிழ்­நாட்­டின் தஞ்­சா­வூர் மாவட்­டத்­தின் ஏனங்­குடி ஊரி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு 1900ஆம் ஆண்­டில் குடி­பெ­யர்ந்த திரு அப்­துல் ரஹி­மான் என்­ப­வ­ரால் 1921ஆம் ஆண்டு தோற்­று­விக்­கப்­பட்­டது 'இஸ்­லா­மிக்' உண­வ­கம். ஏப்­ரல் 4ஆம் தேதி இந்த பழம்­பெ­ரும் உண­வ­கம் அதன் நூறாண்டு நிறை­வைக் கொண்­டா­டு­கிறது.

இதை முன்­னிட்டு ஏப்­ரல் 4ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்­ப­கல் 1 மணி வரை எண் 735 நார்த் பிரிட்ஜ் சாலை­யில் உள்ள உண­வ­கத்­தில் இல­வ­ச­மா­கக் கோழி பிரி­யாணி வழங்­கப்­படும். மேலும், ஆறு மருத்­து­வ­ம­னை­கள், ஆறு பல­துறை மருந்­த­கங்­கள் ஆகி­ய­வற்­றுக்­குக் கோழி பிரி­யாணி பொட்­ட­லங்­களை இல­வ­ச­மாக வழங்கி வரு­கின்­ற­னர்.

"போர்க்­கா­லத்­தின்­போது கம்­போங் கிளாம் பகு­தி­யில் இருந்­த­வர்­க­ளுக்கு என் தாத்தா உண­வ­ளித்து பசி­யாற்றி உள்­ளார் என்று என் தந்தை சொல்ல கேட்­டி­ருக்­கி­றேன். அவ­ரது வழி­யி­லேயே இந்த நூற்­றாண்­டுக் கொண்­டாட்­டத்­தின்­போது மக்­க­ளு­டன் சேர்ந்து கொண்­டாட முடி­வெ­டுத்­தோம்," என்­றார் நிறு­வ­ன­ரின் பேர­னும் மூன்­றாம் தலை­முறை உரி­மை­யா­ள­ரு­மான திரு கலீ­லுர் ரஹ்­மான் அப்துல் வஹாப் (படம்), 59.

திரு கலீ­லின் தாத்தா பெரும் செல்­வ­மும் செல்­வாக்­கும் மிகுந்த அல்­ச­கோஃப் குடும்­பத்தின் தலைமை சமை­யல்­கா­ர­ராக இருந்து பின்­னர் தேங் ரோட்­டில் வர்த்­த­கம் ஒன்றை நடத்­தி­னார். 1921ஆம் ஆண்­டில் நார்த் பிரிட்ஜ் சாலை கடை­வீடு ஒன்­றி­லுள்ள மேசை அளவு பகு­தியை வாட­கைக்கு எடுத்து உணவு சமைத்து விற்­றார்.

அவ்வாறு உத­ய­மா­ன­து­தான் 'இஸ்­லா­மிக்'. வியா­பா­ரம் பெரு­கி­ய­தன் விளை­வாக நான்கு கடை­வீ­டு­களை வாங்­கி­னார் பத்து பிள்­ளை­க­ளுக்­குத் தந்­தை­யான திரு அப்­துல் ரஹி­மான். குடும்­பச் சொத்து­க­ளைப் பிரிப்­ப­தற்­காக கடை­களை விற்று, கலீ­லும் அவர் தந்­தை­யின் சகோ­த­ரர்­கள் பிள்­ளை­களும் சேர்ந்து இரண்டு கடை­வீ­டு­களை மீண்­டும் வாங்கி வியா­பா­ரத்­தைத் தொடர்ந்­த­னர். 2008ஆம் ஆண்டு அவ்­வி­ரண்­டை­யும் விற்று, எண் 745 நார்த் பிரிட்ஜ் சாலை­யில் கலீல் தொடர்ந்து உண­வ­கத்தை நடத்­தி­னார். சென்ற ஆண்டு எண் 735க்குக் கடை மாறி­யது.

கடந்த 30 ஆண்­டு­க­ளா­கத் தொழில்­நுட்­பத்­தைக் கொண்டு உண­வ­கத்­தின் செயல்­பா­டு­களை மாற்றி அமைப்­பது குறித்து ஆராய்ந்­தார் திரு கலீல். அவ்­வாறு தாம் முன்­னெ­டுத்த சில தொழில்­நுட்ப மேம்­பா­டு­க­ளால் இதர உண­வ­கத்­தார் சந்­திக்­கும் சவால்­களை முன்­பா­கவே எதிர்­கொண்­டு­விட்­டார் திரு கலீல்.

"நல்ல சமை­யல்­கா­ரர் வேண்­டும் என்­பர். என் கடை­யில் இயந்­திர இயக்­கு­நர் இருந்­தாலே போதும் என்­பேன்," என்ற கலீல், தம் உண­வ­கச் சமை­யலை இயந்­தி­ரங்­கள்­தான் செய்­கின்­றன என்­றார்.

அதி­கா­லை­யில் வீட்­டில் இருந்­த­ப­டியே 'வைஃபை' மூலம் சமை­ய­லுக்­குத் தேவை­யான முன்­த­யா­ரிப்பு வேலை­க­ளைத் தொடங்­கி­வி­டு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

"காலை­யில் ஏழு மணிக்கு ஊழி­யர்­கள் வேலைக்கு வந்­தால் போதும்," என்­றார் அவர். இயந்­தி­ரங்­க­ளின் உத­வி­யால் உண­வின் சுவை­யும் கல­வை­யும் சீராக இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

உண­வின் ருசியே இந்­தக் கடை­யின் தனித்­து­வம். அதற்­குக் கார­ணம் அவர்­களின் ரக­சிய மசாலா கலவை. கலீ­லின் தாத்தா கைவண்­ணத்­தில் உரு­வான அந்­தக் கல­வை­யைத் தயா­ரிக்­கும் நுட்­பம், அந்­தக் குடும்­பத்­தி­ன­ருக்கு மட்­டுமே தெரிந்த ஒன்று.

நூறு ஆண்­டு­களை வெற்­றி­க­ர­மா­கக் கடந்­து­வந்­துள்ள இந்த உண­வ­கத்தை, வரும் ஆண்­டு­களில் 'ஃப்ரேன்­சைஸ்' முறை­யில் விரி­வாக்­கம் செய்­யும் சாத்­தி­ய­மும் ஆராய்ந்து வரப்­ப­டு­கிறது. மேலும் தொழில்­நுட்­பத்­தைக் கொண்டு உணவு உற்­பத்தி செய்­யும் முறை­யை­யும் ஆரா­ய­வி­ருப்­ப­தா­கக் கூறி­னார் திரு கலீல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!