இளையர்களுக்கு அறைகூவல் விடுத்த ‘நாளை நமதே’

தமிழ்­மொழி விழா­வின் ஓர் அங்­க­மாக, தமி­ழ­வேள் நற்­பணி மன்­றம், 'நாளை நமதே' என்ற நிகழ்ச்­சிக்கு ஏப்­ரல் 25ஆம் தேதி அன்று ஏற்­பாடு செய்­தது. மன்­றம் பல ஆண்­டு­களாகத் தமிழ்­மொழி சார்ந்த நிகழ்ச்­சி­களை நடத்தி வரு­கிறது.

உற்­சா­கம், ஊக்­கம், தன்­னம்­பிக்கை ஆகிய அம்­சங்­க­ளு­டன் இளை­யர்­க­ளை­யும் கவ­ரும் வித­மாக இந்­நி­கழ்ச்சி அமைந்­தது. இளை­ஞர்­கள் இன்­றைய உல­கில் துணிச்­சல்­மிக்க மனப்­போக்­கைக் கொண்டு சோத­னை­க­ளைச் சாத­னை­க­ளாக மாற்­ற­லாம் என்­பதை நிகழ்ச்சி அறி­வு­றுத்­தி­யது.

நிகழ்ச்சி நெறி­யா­ளர் முதல் பேச்­சா­ளர்­கள் வரை இளை­யர்­கள்­தான். நிகழ்­விற்­குச் சிறப்பு விருந்­தி­ன­ராக நாடா­ளு­மன்ற முன்­னாள் நிய­மன உறுப்­பி­ன­ரான திரு முக­மது இர்ஷாத் கலந்­து­கொண்­டார்.

இன்­றைய இளை­ஞர்­க­ளி­டையே நில­வும் சிக்­கல்­கள், அவற்­றைச் சமா­ளிக்­கும் வழி­கள் ஆகி­ய­வற்­றைப் பற்றி சிறப்பு விருந்­தி­னர் தம் உரை­யில் மிக எதார்த்­த­மா­கப் பேசி­ இ­ருந்­தார்.

அதை­ய­டுத்து, குமாரி சர்­மிலி செல்­வ­ராஜி, ஓர் இளை­ய­ரா­கத் தனது வாழ்க்கை அனு­ப­வங்­க­ளை­யும் தனக்­குள் எழுந்த கேள்­வி­களை­யும் பகிர்ந்­து­கொண்டு தனது தன்­மு­னைப்­புப் பேச்­சைத் தொடங்­கினார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் நரம்­பி­யல் துறை­யில் முனை­வர் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்டு வரும் அவர், சமூக எதிர்ப்­பார்ப்பு­களுக்­கும் அப்­பாற்­பட்ட ஒரு­வ­ரது சொந்த மன நிம்­மதி, மன அமைதி, இலட்­சி­யக் கொள்கை, தொடர் முயற்சி, நிதா­ன­மான போக்கு போன்­ற­வற்­றின் முக்­கி­யத்­து­வத்­தைச் சுட்­டி­னார்.

தமி­ழ­கத்­தி­லி­ருந்து திரு சோழ. நாக­ரா­ஜன் நிகழ்ச்­சி­யில் இணைந்து­கொண்­டார். செம்­ம­லர் இலக்­கிய இத­ழின் இணை ஆசி­ரி­ய­ரான அவர், 'அறி­வி­யல் தமிழை அன்றே முன்­மொ­ழிந்­த­வர் கலை­வா­ணர்' என்ற தலைப்­பில் சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.

உலக அரங்­கில் தமிழ்­மொ­ழி­யின் அறி­வி­யல் கூறு­களை எடுத்­துக்­கூற வேண்­டும் என்ற அவர், அவ்­வாறு எடுத்­து­ரைக்க கலை­வாணர் போன்ற கலை­ஞர்­க­ளைப் பற்றி இளை­ஞர்­கள் அறிந்­தி­ருக்க வேண்­டும் என்று அன்பு வேண்­டு­கோள் ஒன்றை விடுத்­தார்.

இரு பேச்­சா­ளர்­க­ளின் சிறப்­புரை­க­ளுக்­குப் பிறகு கருத்­தா­டல் அங்­கம் ஒன்று நடை­பெற்­றது. ஆசி­ரி­யர்­கள், மாண­வர்­கள், இளை­ஞர்­கள் என அனைத்து வய­தி­ன­ரை­யும் கவ­ரும் அங்­க­மாக அது அமைந்­தது.

தன்­னம்­பிக்கை, தன்முனைப்பு ஆகி­ய­வற்­று­டன் இளை­யர்­கள் தங்­களுக்­கான பாதையை வகுத்­துக்­கொள்­ளும்­போது தடை­கள் நீங்­கும் என்ற சிந்­த­னை­யைப் பிள்­ளை­க­ளி­டம் நாம் விதைக்க வேண்­டும் என்­றார் மன்­றத்­தின் மூத்த ஆலோ­ச­கர் திரு இலி­யாஸ்.

செய்தி: கலை­வாணி இளங்கோ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!