இளையர் குரலில் இளமைக் குறள்

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

எல்லா காலங்­க­ளி­லும் எல்லா சூழ்­நி­லை­க­ளி­லும் எல்­லா­ருக்­கும் பொருந்­தும் பொது மறை­யான திருக்­கு­றள் தங்­கள் வாழ்­வோடு எவ்­வாறு பொருந்­து­கிறது என்­பதை ஆரா­ய­வும் புரிந்து கொள்­ள­வும் சிங்­கப்­பூர் தமிழ் இளை­யர் ­க­ளுக்கு அண்­மை­யில் ஒரு வாய்ப்பு கிட்டியது.

சிற்­பி­கள் மன்­ற­மும் அதி­பதி நாட­கக் குழு­வும் இணைந்து தமிழ் மொழி விழாவை ஒட்டி "இளை­யர் குறள் (குரல்)" என்ற மின்­னி­லக்க நிகழ்வு அந்த வாய்ப்பை ஏற்­ப­டுத்­தித் தந்­தது.

தேர்வு செய்­யப்­பட்ட எட்டு குறள்­க­ளைக் கருப்­பொ­ரு­ளா­கக் கொண்டு, எட்டு குறும்­ப­டங்­கள் உரு­வாக்­கப்­பட்­டன. இளை­யர்­கள் எழுதி இயக்க, இளை­யர்­களே அவற்­றில் நடித்­துள்­ள­னர்.

வெவ்­வேறு குறள்­களும் இளை­யர்­க­ளுக்­குக் கற்­றுத் தரும் பாடம், நடை­முறை வாழ்­விற்கு இவற்றை எவ்­வாறு பயன்­ப­டுத்­த­லாம் என்­பதை குறும்­ப­டங்­கள் மிக எளி­மை­யான முறை­யில் சித்­தி­ரிக்க முயன்­றன.

அவற்­றில் ஒன்று, உழைப்­பும் விடாமுயற்­சி­யும் நிச்­ச­யம் பலன் அளிக்­கும் என்­ப­தைக் காட்ட முனைந்­தது 'படிப்­ப­டி­யாக' என்ற குறும்­ப­டம். "தெய்­வத்­தான் ஆகா தெனி­னும் முயற்­சி­தன் மெய்­வ­ருத்­தக் கூலி தரும்" என்ற குறளை அது அடிப்­ப­டை­யா­கக் கொண்­டி­ருந்­தது.

சேர்ந்து உடற்­ப­யிற்சி செய்­யும் நண்­பர்­களில் ஒரு­வர் சோர்ந்து போகி­றார். அவ­ருக்கு ஆத­ர­வாய் இருக்க பெரு­மு­யற்சி செய்த நண்­ப­ருக்கு இத­னால் பெரும் ஏமாற்­றம். அதைக் கண்ட தோழி, பின்­வ­ரும் நாட்­களில் உடற்­ப­யிற்­சி­யில் கடின உழைப்பை முத­லீடு செய்­கி­றார். பல­னும் அடை­கி­றார்.

குறும்­ப­டக் கதை ஒன்றை எழுதி அதில் நடித்­த­தோடு, மூன்று குறும்­ப­டங்­களில் உதவி இயக்­கு­ ந­ரா­க­வும் பணி­பு­ரிந்­தார் சம்­பத் ஓவியா, 17.

"ஈரா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு எழு­தப்­பட்ட திருக்­கு­ற­ளைத் தொடர்­பு­ப­டுத்தி, இந்த 21-ஆம் நூற்­றாண்­டில் நம் வாழ்­வில் நடக்­கும் பிரச்­ச­னை­க­ளுக்­கும் கூட நம்­மால் தீர்வு காண முடி­கிறது. இதை என்­னால் கண்­கூ­டாக அந்த காணொ­ளி­களில் காண முடிந்­தது."

"நண்­பர்­க­ளுக்கு இடை­யில் நடக்­கும் சண்­டை­களில் இருந்து, அறி­வி­யல் தொடர்­பான சிக்­கல்­கள், ஏன் சமூக ஊட­கங்­களில் நாம் சந்­திக்­கும் பிரச்­சி­னை­க­ளை­கூட திருக்­கு­ற­ளு­டன் பொருத்­திப் பார்த்து மாண­வர்­கள் கதை­களை எழு­தி­யி­ருந்­த­னர்," என்­றார் ஓவியா.

இக்­கு­றும்­ப­டங்­கள் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு புதிய புரி­தல்­க­ளைத் தந்­தன. அவர்­களில் ஒரு­வர் சாதனா ரமேஷ், 17.

"ஒவ்­வொரு குறும்­ப­ட­மும், மிக குறை­வான நேரத்­தில் பல ஆழ­மான கருத்­துக்­க­ளைக் கூறின. "உளைச்­சல்" எனும் படத்தை நான் மிக­வும் ரசித்­தேன். எளிய உரை­யா­டல், நேர்த்­தி­யான காட்சி அமைப்பு, திற­மை­யான நடி­கர்­கள் ஆகிய அம்­சங்­க­ளைக் கொண்ட அந்­தக் குறும்­ப­டம் மன உளைச்­சல் உள்­ள­வர்­க­ளின் நிலையை சித்­தி­ரித்­தது. உண்­மை­யி­ல் மனச்­சு­மை­யால் அவ­திப்­ப­டு­ப­வர்­கள் பலர், அதற்­கான அறி­கு­றி­களை வெளிப்­ப­டுத்­த­ மாட்­டார்­கள் என்­பதை உணர்ந்­தேன். அதோடு, நண்­பர்­க­ளின் ஆத­ரவு எவ்­வ­ளவு முக்­கி­யம் என்­ப­தும் புரிந்­தது," என்ற சாதனா, வீட்­டில் உள்ள திருக்­கு­றள் நூல்­ க­ளைப் படிக்­கும் ஆர்­வத்தை இந்­ நி­கழ்வு தூண்­டி­யதா­கக் கூறி­னார்.

"இந்த இளை­யர் மின்­னி­லக்க நட­வ­டிக்­கை­யின் மூலம் இளை­யர்­கள் பல்­வேறு வாழ்க்­கைப் பாடங்­களை உணர்ந்­து­கொள்­ளும்­படி செய்­வதே எங்­கள் நோக்­கம்," என்­றார் இளை­யர் குற­ளின் ஏற்­பாட்­ட­ள­ரும் சிற்­பி­கள் மன்­றத்­தின் தலை­வ­ரு­மான திருச்­செல்வி.

"அத்­து­டன், மின்­னி­லக்க ஊட­கம் வழி­யாக தமிழ் மொழியை மேம்­ப­டுத்­தும் நோக்­கில், பிற தமிழ் சமூக அமைப்­பு­க­ளு­டன் கூட்­டாக செயல்­பட்டு, இளை­யர்­கள் அவர்­ க­ளின் திறன்­களை வளர்த்­துக் கொள்ள ஒரு தளத்தை வழங்­கி­னோம்," என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!