பாதுகாப்பின் முதற்படி இதுவே

வெளி­நாட்டு பய­ணி­கள் வந்­து ­போகும் சாங்கி விமான நிலை­யத்­தில் எவ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று இருக்­கக்­கூ­டும் என்­பதை உறு­தி­யாகக் கூற­மு­டி­யாது.

ஆனால் அப்­படி ஒரு­வ­ருக்கு அத்­தொற்று இருந்து அது மற்­ற­வர்­க­ளுக்கு பர­வா­மல் இருக்­கும் முயற்­சி­யில் துப்­ப­ரவு மேலா­ள­ராக பணி­யாற்­றும் திரு பெரேரா கிலிவ்­டன் சன்­ஜி­வின் பங்கு இன்­றி­ய­மை­யா­தது.

கழி­வறை, செக்-இன் கவுன்­டர்­கள், மின்­தூக்கி, மின்­ப­டிக்­கட்டு என சாங்கி விமான நிலை­யம் 'சோன் 2' பகுதி ஆகியவற்றின் சுகாதாரத்தை LS2 நிறு­வ­னத்­தின் திரு கிலிவ்ட­னும் அவ­ரது குழு­வி­ன­ரும் நிலை­நாட்டி வரு­கின்­ற­னர்.

கொவிட்-19 பரவலுக்கு முன், ஒவ்­வொரு மாறு­நேர தவ­ணை­யிலும் ஒரு­முறை மேற்­கொள்­ளப்­படும் சுத்தி­க­ரிப்புப் பணி இப்போது மூன்று முறை­ நடைபெறுவதாகக் கூறினார் திரு கிலிவ்­டன், 42.

வேலைப்பளு அதி­க­ரித்­து­விட்­டா­லும் எதற்­காக இதைச் செய்கி றோம் என்­ப­தில் எல்லா துப்­புரவு ஊழி­யர்­களும் தெளி­வாக உள்­ள­னர் என்று அவர் விளக்­கி­னார்.

பெருந்­தொற்­றின் தொடக்­கத்­தில் வேலை இருக்­குமா என்ற ஐயம் சக ஊழி­யர்­க­ளைப் போல் அவ­ருக்­கும் இருந்­தது என்று கூறிய திரு கிலிவ்­டன், சில மூத்த ஊழி­யர்­கள் தங்­க­ளது நலன் கருதி வேலை­யி­லி­ருந்து வில­க­வும் செய்­த­னர் என்­றார்.

அண்மையில் உண்டான சாங்கி விமான நிலைய கிரு­மித்­தொற்று குழு­மம், சுய பாது­காப்­பில் இன்­னும் தீவி­ர அக்கறை செலுத்தக் காரணம் ஆனது.

அதில் கையு­றை­க­ளை­யும் முகக்­க­வ­சங்­க­ளை­யும் இரண்டு அல்­லது மூன்று மணி நேரத்­திற்கு ஒரு­முறை மாற்­று­வது, கைகளை அடிக்­கடி கிருமிநாசி­னியுடன் சுத்தம் செய்­வது ஆகி­யவை அடங்­கும்.

அதிக அபா­யம் இருக்­க­கூ­டிய இடங்­களை சுத்­தம் செய்தால் அதற்­கு­ரிய பாது­காப்பு ஆடையை அணிந்து கிலிவ்டன் பணியை மேற்­கொள்­வார்.

இவ­ரின் மனைவி திரு­மதி நாகம்­மாள் செர்ட்­டிஸ் பாது­கா­வல் அதி­கா­ரி­யாக சாங்கி விமான நிலை­யத்­தில் பணி­யாற்­று­கி­றார்.

மாறு­நேர வேலை­யில் ஈடு­படும் இரு­வ­ரும் வீடு திரும்­பி­ய­தும் முதல் வேலை­யாக குளித்­து­விட்ட பிறகே உயர்­நி­லைப் பள்­ளி­யில் பயி­லும் அவர்­க­ளின் இரு மகள்­க­ளு­டன் பொழுதைக் கழிப்­பர்.

"நாட்­டில் கொவிட்-19 பர­வலை கட்­டுப்­ப­டுத்­தும் முதல் அரண் சாங்கி விமான நிலை­யத்­தில் உள்ளது. இங்கு சுகா­தா­ரம் கட்டிக்­காக்­கப்­ப­டா­விட்­டால் அனைவருக்கும் பாதிப்பு. எங்­கள் பங்கை நாங்­கள் செய்­திட, பொதுமக்­களும் தங்­க­ளது பங்­கிற்கு பாது­காப்பு விதி­மு­றை­களைக் கடைப்­பி­டிக்க வேண்­டும்," என்றார் கிலிவ்டன்.

வார­இ­றுதி நாட்­களில் வெளியே சென்று குடும்­பத்­தி­ன­ரு­டன் திரைப்­ப­டம் பார்ப்­பது, காற்­பந்து விளை­யா­டு­வது போன்ற நட­வ­டிக்­கை­களை ஒத்தி­வைத்துள்ளார் அவர். ­ கூடிய விரை­வில் அதற்­கு விடி­வு­கா­லம் பிறக்­கும் என்பது அவரது நம்பிக்கை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!