தமிழோடு இணைந்த பெற்றோர்-பிள்ளை

இந்து இளங்­கோ­வன்

காலை வேளை­யில் தங்­க­ளது அம்மா, அப்­பா­வின் உத­வி­யோடு வீட்டு வாச­லில் பாரம்­ப­ரிய புள்ளி கோலம் போட்டு அழகு பார்த்­த­னர் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு­வின் 'தமி­ழோடு இணை­வோம்: அழகே! தமிழே!' என்ற மெய்நிகர் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற தொடக்க நிலை 3 மற்­றும் 4ஆம் வகுப்பில் பயி­லும் 50 தமிழ் மாண­வர்­கள்.

ஜூன் 26ஆம் தேதி தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக்­ கு­ழு­வின் ஏற்பாட்­டில் நடந்த இந்­நி­கழ்ச்­சி­யில் 'சொல்­லோடு விளை­யாடு', 'கலை­யோடு உற­வாடு', 'உற­வோடு உரை­யாடு' என மாணவர்கள் மட்டுமல்லாமல் அவர்­க­ளது பெற்­றோர்­க­ளை­யும் கவ­ரும் வகை­யில் சுவா­ர­சி­ய­மான அங்­கங்­கள் இடம்­பெற்­றி­ருந்தன.

புத்­தாக்­கச் சூழ­லில் தமிழ்­மொழி­யை­யும் பண்­பாட்­டை­யும் உணரச் செய்­ய­வும் பெற்­றோர்-பிள்ளை இடையே உள்ள உறவை வலுப் ­ப­டுத்­தும் நோக்­கத்­தோ­டும் இந் ­நி­கழ்ச்சி ஏற்­பாடு செய்­யப்­பட்டது என்று ஏற்­பாட்­டுக் ­குழுவினர் கூறினர்.

கிரு­மித்­தொற்று காலத்­தில் வெளி­நாட்­டிற்குச் செல்ல முடி­யா­மல் போனா­லும் விமா­னத்­தி­லும் கப்­ப­லி­லும் மாணவர்களையும் அவர்­க­ளது பெற்­றோர்­க­ளை­யும் அழைத்துச் சென்­றது 'அழகே! தமிழே!' நிகழ்ச்சி.

ஒவ்­வொரு விளை­யாட்டு அங்­கத்­தின் நடு­வி­ல் விமா­னத்­தி­லும் கப்­ப­லி­லும் பய­ணம் செய்து ஒரு தீவை அடை­வது போன்ற மெய் நிகர் அனு­ப­வம் மாண­வர்­களுக்கு உற்­சா­க­மூட்­டி­யது.

நிகழ்ச்­சி­யில் வெஸ்ட் ஸ்ப்­ரிங் தொடக்­கப்­பள்­ளி­யில் பயி­லும் மகன் குமார் கிரித்திக்குடன் பங்­கேற்­றார் திரு­மதி ரேவதி ப்ர­தீ­ப்.

"விடு­முறை நாளில் எனது மக­னோடு இந்நிகழ்ச்­சி­யின் வாயி­லாக சிறப்­பான முறை­யில் நேரத்தைச் செல­விட முடிந்­தது மகிழ்ச்­சியைத் தரு­கிறது. பலர்­முன் பேச தயங்­கும் எனது மகன், இந்த நிகழ்ச்­சி­யின் நட­வடிக்­கை­களில் நிறைய உற்­சாகத்­து­ட­னும் தைரி­யத்­து­ட­னும் கலந்­து­கொண்டு மற்ற மாணவர்கள் முன் பேச முன் வந்­தது எனக்கு ஆச்­ச­ரி­யத்தைத் தந்­தது," என்றார் திருமதி ரேவதி.

"உற­வோடு உரை­யாடு என்­னும் அங்­கத்­தில் என்னை பற்­றிய சில கேள்­வி­கள் கிரித்திக்கிடமும் அவ­ரைப் பற்­றிய சில கேள்­வி­கள் என்­னி­ட­மும் கேட்­கப்­பட்­டன. இது மிக­வும் சுவா­ர­சி­ய­மாக இருந்­தது.

"பொது­வாக இணை­யம் வழி மெய் நிகர் பாணி­யில் நடை­பெ­றும் நிகழ்ச்­சி­கள் சற்று நேரம் கழித்து சலிப்பு ஏற்படும். ஆனால் இந்த நிகழ்ச்சி இணை­யம் வழி படைக்கப்­ பட்­டி­ருந்­தா­லும் எங்­களை ஈர்க்­கும் வகை­யில் இருந்­தது. பிள்­ளை­களும் பெற்­றோர்­களும் இணைந்து பங்­கேற்­கும் இதுபோன்ற நிகழ்ச்­சி­களைத் தொடர்ந்து வழங்­க­ வேண்­டும்." என்­றும் அவர் கேட்டுக் கொண்டார்.

காயத்ரி, சஜினி போன்ற உள்­ளூர் தொலைக்­காட்சிப் பிர­ப­லங்­களும் விளை­யாட்டு அங்­கங்களை அழ­கிய தமி­ழில் உற்­சா­க­மூட்­டும் வகை­யில் வழி­ந­டத்­தி­னர்.

மாண­வர்­களும் அவர்­க­ளது பெற்­­றோரும் குழுக்­க­ளாக பிரிக்­கப்­பட்டு 'ஸூம்' தளத்­தின் தனி அறை­ (breakout room) நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­னர்.

அப்போது குழுக்­க­ளுக்கு வழி­காட்­டி­யாக தமிழ் இளை­ஞர்­கள் இருந்தனர். இளை­ஞர்­கள் தமி­ழில் நட­வ­டிக்­கை­களை வழி­ந­டத்தி மாணவர்களுக்கு ஊக்­கம் அளித்­த­னர்.

இப்­படி மாணவர்கள், இளை­யர்­கள், பெரி­ய­வர்­கள் என முத்தரப்பின ரையும் ஒருங்­கி­ணைத்து தமிழைப் புத்­தாக்­கத்­து­டன் கொண்­டா­டி­யது இந்­நி­கழ்ச்சி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!