ஏழு நாட்களுக்கு மெய்நிகர் தளத்தில் ‘நாளும் ஒரு கீதம்’

இர்­‌‌‌‌‌ஷாத் முஹம்­மது

வாரம் முழு­தும் இந்­திய பாரம்­ப­ரிய இசையை மெய்­நி­கர் தளத்­தில் காணொ­ளிப் பதிவு மூலம் வழங்­கி­யது சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையம்.

'நாளும் ஒரு கீதம்' என்ற தலைப்­பில் வெளி­வந்த அந்த இசைக் காணொ­ளி­கள், உலக இசை தினத்தை முன்­னிட்டு ஜூன் 21ஆம் தேதியிலிருந்து ஒவ்ெவான்றும் ஏழு நாட்களுக்கு வெளியிடப்பட்டன.

சென்ற ஆண்­டுக்­கான இளம் க­லை­ஞர் விரு­தைப் பெற்ற கர்­நா­டக இசைக் கலை­ஞர் சு‌ஷ்மா சோம­சே­க­ரன் 'நாளும் ஒரு கீதம்' தொடரை வடி­வ­மைத்து, தயா­ரித்­துள்­ளார்.

"பாரம்பரிய இசை பற்றி தெரிந்தவர்கள் மட்டுமின்றி அனை வரும் கர்நாடக இசையை ரசிக்க வேண்டும் என்ற விருப்பமே 'நாளும் ஒரு கீதம்' உருவானதற்கான மூலக் காரணம்," என்கிறார் சுஷ்மா,

"அழகான, எளிமையான பல மெல்லிசைகளும் கவிதைகளும் புதைந்துள்ள பாடல்கள் நிறைய உள்ளன. அதனால் மக்களுக்கு அதைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பண்பாட்டின் பல பரிணாமங்களை மக்களுக்குக் கொண்டு செல்லும் சேவையில் ஈடுபட்டுவரும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து செய்தது சிறப்பான அம்சம்," என்றும் அவர் சொன்னார்.

தொட­ரின் தொடக்­கத்­தில் 'காற்­றி­னிலே வரும் கீதம்' எனும் பாட­லுக்­குப் புல்­லாங்­கு­ழல் வாசித்து இசைத் தாலாட்­டைப் படைத்­துள்­ளார் நிரஞ்­சன் பாண்­டி­யன்.

'ஞான மார்க்­கம் நானே சேர' எனும் பாட­லைப் பாடி­யுள்­ளார் முனை­வர் லாவண்யா பாலச்­சந்­தி­ரன். யாழ் இசை­யில் அழ­காக 'ஸ்ரீ சக்ர ராஜ' பாட­லைக் கொண்டு வந்­துள்­ளார் அர்ச்­சனா குமா­ர­சாமி.

பல நல்ல கருத்­து­களை எளி­மை­யாக 'சினம் அடை­யாதே' பாட­லைப் பாடி­யுள்­ளார் வி.எம்.சாய் விக்­னே­‌ஷ்­வர்.

'ஆசை முகம் மறந்து போச்சே', 'குறை ஒன்­றும் இல்லை' எனும் இரண்டு பாடல்­களை மாலை­யா­கக் கோர்த்­துப் பாடி இசை விருந்­த­ளித்­துள்ளனர் தோழி­க­ளான பிரி­ய­தர்­‌ஷினி முரளி, அக்­‌‌ஷயா பிரபு, புனிதா ஆறு­மு­கம்.

'எத்­தைக்­கண்டு நீ', 'வேத மொழி­யர்' எனும் பாடல்­க­ளை தங்­கள் மகள்­கள் ஷ்ரத்தா ஸ்ரீராம், ஹிரண்­மயி ஆனந்­து­டன் பாடி­யுள்­ள­னர் இரு தாய்­மார்­கள் ஸ்ரீவித்யா ஸ்ரீராம், ‌வை‌ஷ்­ணவி ஆனந்த்.

மகா­கவி பார­தி­யார் இயற்­றிய 'நல்­ல­கா­லம் வரு­குது' பாட­லைப் பாடி­யுள்­ள­னர் சித்ரா பூர்­ணிமா, கார்த்­திக் ரவீந்­தி­ரன் தம்­ப­தி­யி­னர்.

இந்­தப் பாடல்­களை ஒளிப்­ப­திவு செய்து தர­மான காணொ­ளி­யா­கத் தயா­ரித்­த­வர் சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையத்­தின் தொழில் நுட்­பம், தயா­ரிப்­புக் குழு­வின் உறுப் பினர் திரு நட்­சத்­தி­ரம் பிரேம்­குமார், வயது 34.

அண்­மை­யில் கைபேசியிலேயே முழு­நீ­ள தமிழ்த் திரைப்­ப­டத்­தைத் தயா­ரித்த குழு­வைச் சேர்ந்த அந்த இளை­யர், 'நாளும் ஒரு கீதம்' தொடரை ஒளிப்­ப­திவு செய்து வெளி­யிட்­ட­தில் மகிழ்ச்­சி­யும் மன­நி­றை­வும் அடைந்­த­தா­கக் கூறி­னார்.

குறு­கிய நேரத்­தில் அனைத்து காட்­சி­க­ளை­யும் ஒளிப்­ப­திவு செய்­தது சவா­லாக இருந்த நிலை யிலும் தர­மான காணொ­ளி­யாக அது மிளிர கைகொ­டுத்­த­வர்­க­ளுக்கு நன்றி நல்­கி­னார் அவர்.

இந்த இசைக் காணொ­ளித் தொடரை இணைக்­கப்­பட்­டுள்ள 'கியூ­ஆர்' குறி­யீட்டை வருடி சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையத்­தின் இணை­யப்­பக்­கத்­தில் கண்டு மகி­ழ­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!