அனுபவமே ஆசான்; நிதானமே பாடம் சுகாதார அமைச்சின் தாதியர் தகுதிவிருது பெற்றவர்களில் ஒருவர்

சார்ஸ் நோய் 2003ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரைத் தாக்­கி­ய­போது திரு­மதி சு.நா. முல்­லாத் பி‌ஜு, டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் தாதி­யா­கப் பணி­பு­ரிந்து வந்­தார்.

சார்ஸ் நோயா­ளி­க­ளைப் பரா ­ம­ரிக்­கும் பொறுப்­பில் இருந்த அவர், அந்­நோயைப் பற்றி அப்­போது போதிய விவ­ரம் இல்­லா­த­தால் சற்­றுப் பதற்­ற­மா­கவே இருந்­தது என்­றார்.

ஆனால் மருத்­துவ நிர்­வா­கத் தினர் நோய்ப் பர­வல் தடுப்பு வழி­மு­றை­களை அமல்­ப­டுத்தி அனை­வரும் அதனை முறை­யாக பின்­பற்­று­வதை உறு­தி­செய்­ததை திரு­மதி பிஜு நினைவுகூர்ந்­தார். அத­னால் அந்த இக்­கட்­டான கால­கட்­டத்தை வெற்­றி­க­ர­மாக கடக்க முடிந்­தது என்­றார் அவர்.

டான் டோக் செங் மருத்­துவ மனை­யில் கிட்­டத்­தட்ட 23 ஆண்டு கள் சேவை­யாற்­றிய பின்­னர், மன நலக் கழ­கத்­தில் 2018ஆம் ஆண்­டில் சேர்ந்­தார் திரு­மதி பிஜு.

ஆனால் சுமார் இரண்டு ஆண்டு­களில் சார்ஸ் பர­வ­லைப் போன்ற மோசான சூழ்­நி­லையை கொவிட்-19 கிரு­மித்­தொற்று ரூபத்­தில் அவர் சந்­தித்­தார்.

மருந்­தி­யல் தாதி­யான திரு­மதி பிஜு, மனநலப் பிரச்சினை உள்ளவர்கள் மற்ற நோய்கள் அல்லது தொற்று நோய் உள்ளபோது தங்கிருக்கும் பிரிவைப் பரா­ம­ரிக்­கும் தாதி­யர் குழுவை வழி­ந­டத்­தி வருகிறார்.

"முந்­தைய வேலை அனு­ப­வம் தற்­போ­தைய கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சூழ­லைச் சமா­ளிக்க பெரி­தும் கைகொ­டுத்­தது. கிரு­மித்­தொற்­றால் பாதிப்­ப­டைந்த நோயாளி­களைப் பரா­ம­ரிக்­க­வும் நோய் பர­வா­மல் இருக்க சக தாதி­யர் கடைப்­பி­டிக்க வேண்­டிய பாது­காப்பு வழி­மு­றை­களை நடை­மு­றைப் படுத்­த­வும் தன்­னம்­பிக்­கை­யு­டன் செயல்­பட முடிந்­தது," என்று தெரி­வித்­தார் மன­ந­லக் கழக மருத்­து­வத் தனி­மைப்­ப­டுத்­து­தல் பிரி­வில் பணி­யாற்­றும் 45 வயது தாதி பிஜு.

மன­ந­லப் பிரச்­சினை உள்­ள­வர்­ க­ளுக்கு கொவிட்-19 பரி­சோ­த­னை­கள் செய்­வது சுல­ப­மல்ல என்று கூறிய திரு­மதி பிஜு, அது அவர்­ க­ளுக்கு அதிகப் பதற்றத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்­றார்.

"முத­லில் மருத்­து­வர்­கள் உட்­பட சக மருத்­துவ நிபு­ணர் குழு­வி­ன­ரு­டன் அணுக்­க­மாகச் செயல்­பட்டு நோயா­ளி­க­ளி­டம் அதிக நேரம் உரை­யாட வேண்­டும். ஊக்­க­மும் தைரி­ய­மும் ஊட்டி, அவர்­க­ளுக்கு நம்­பிக்கை வந்த பிறகே மேற்­கொண்டு அவர்­க­ளைப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த முடி­யும்," என்று கூறி­னார் தாதி பிஜு.

மன­ந­லப் பிரச்­சி­னை­களை எதிர்­கொண்ட சில வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­த­னைக்­காக மன­ந­லக் கழ­கத்­தில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கக் கூறி­னார் திரு­மதி பிஜு. அனு­ம­திக்­கப்­பட்ட இந்­திய ஊழி­யர்­க­ளி­டம் தமி­ழில் பேசி, நட்­பு­றவை வளர்த்து, அவர்­கள் குண­ம­டைந்து நடை­முறை வாழ்க்­கைக்கு திரும்ப உத­வி­ய­தில் மிகுந்த திருப்தி அடைந்­த­தாக தாதி பிஜு சொன்­னார்.

சக தாதி­யருக்கு ஒரு முன்­மா­தி­ரி­யாக விளங்­கும் திருமதி பிஜு, தற்­போது கர்­டின் பல்­க­லைக்­க­ழக சுகா­தா­ரப் பணித் தலை­மைத்­து­வம் தொடர்­பான முது­நி­லைப் பட்­டப் படிப்­பைப் பகு­தி­நே­ர­மாக மேற்­கொண்­ட­வாறு இல்­லற வாழ்க்­கை­யை­யும் சமா­ளித்து வரு­கி­றார்.

தாம் தாதி­மைத் துறை­யில் கால் பதிக்க மூலக் கார­ண­மாக இருந்­த­வர் தற்­போது மன­ந­லக் கழ­கத்­தில் மூத்த 'மருந்­தி­யல்' தாதி­ய­ரா­கப் பணி­யாற்­றும் அவ­ரது 46 வயது அக்கா திரு­மதி பிந்து என்று திரு­மதி பிஜு கூறி­னார்.

நோயா­ளி­க­ளைப் பரா­ம­ரிப்­பில் அக்கா காட்­டிய கடப்­பாடே தம்­மை­யும் அவ்­வ­ழி­யில் செல்­லத் தூண்­டி­யது என்­றும் குறிப்­பிட்­டார் திருமதி பிஜு. இரு சகோ­த­ரி­க­ளுக்­கும் அண்­மை­யில் தேசிய தின நீண்­ட­கா­லச் சேவைப் பதக்­கம் வழங்கப்­பட்­டது.

இப்­படி நோய்ப் பர­வலை கட்­டுப் படுத்தி, மருத்­து­வப் பிரிவு சுமூ­க­மா­கச் செயல்­ப­டு­வதை உறுதி செய்து, நோயா­ளி­க­ளின் மன­ந­லத் தேவை­க­ளை­யும் பூர்த்தி செய்த தாதி பிஜு­வுக்கு இவ்­வாண்­டின் சுகா­தார அமைச்­சின் தாதி­யர் தகுதி விருது வழங்­கப்­பட்­டது.

எதிர்­கா­லத்­தில், தாம் பணி­யாற்­றும் மருத்­து­வப் தனி­மைப்­ப­டுத்­து­தல் பிரி­வில், நோயா­ளி பராமரிப் புக்கான மேம்­பட்ட தீர்­வு­களை உரு­வாக்கி அவற்­றைக் கொள்­கை­ளாகப் பரிந்­து­ரைத்து நடை­மு­றைப்­படுத்­து­வதே தமது இலக்கு என்று கூறி­னார் இந்­தக் கட­மை­ உ­ணர்வு­ மிக்க தாதி.

- செய்தி: ப.பாலசுப்பிரமணியம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!