மூத்த ஒலிபரப்பு கலைஞரின் மூத்தோருக்கான வானொலி சேவை

இந்து இளங்­கோ­வன்

சிவாஜி கணே­சன், எம்ஜிஆர் பாடல்­களை விரும்பி கேட்­கும் தாத்தா பாட்­டி­க­ளின் செவி­க­ளுக்கு விருந்­தூட்­ட­வும் அவர்களுள் தனி­மை­யில் இருப்­ப­வர்­க­ளுக்­குச் செவி ­கொ­டுக்­க­வும் 'வின்­டேஜ் ரேடியோ'. கடந்த ஓராண்­டா­கச் செய­லாற்றி வரு­கிறது

கைத்­தொ­லை­பேசி செயலி, இணை­யம் வழி இயங்­கும் இந்த இல­வச வானொ­லி­யில் தின­மும் இரவு 8 மணி­யி­லி­ருந்து 10 மணி வரை தமிழ்ப் பாடல்­கள் ஒலி­ப­ரப்­பட்டு வரு­கின்றன.

1950களி­லி­ருந்து 1970கள் வரை­யி­லான நினை­வில் நீங்கா தமிழ் பாடல்­க­ளைத் தேர்வு செய்து, அவற்­றைப் பற்­றிய விவ­ரங்­க­ளை­யும் துணுக்­கு­க­ளை­யும் கூறி மூத்­தோரை மீண்­டும் அக்­கா­லத்­திற்கே அழைத்து செல்­கி­றார் முன்னாள் வானொலி படைப்­பா­ளர் திரு பி. என். பாலா.

ரசித்துக் கேட்க பாடல்­கள் மட்­டும் அல்ல, இந்த வேக­மான வாழ்க்கைச் சூழ­லில் தொழில்­நுட்ப வளர்ச்­சிக்கு ஈடு­கொ­டுக்க சிர­மப்­படும் நமது மூத்­தோ­ருக்கு முக்­கிய தக­வல்­களை மிக எளிய முறை­யில், தெளி­வாகக்கொண்டு சேர்க்­கிறது வின்­டேஜ் ரேடியோ.

கிரு­மித்­தொற்று விவ­ரங்­கள், தடுப்­பூசி தக­வல்­கள், மூத்­தோ­ருக்­கான அர­சாங்கத் திட்­டங்­கள், பார்த்து செய்ய எளிய உடற்­ப­யிற்சி காணொ­ளி­கள் என அவ­சி­ய­மான தக­வல்­களை நேர­டி­யாக புரிந்த மொழி­யில் தெரிந்த குர­லில் மூத்தோரைச் சென்­ற­டை­கின்றன.

முன்­கூட்­டியே ஒலிப்­ப­திவு செய்து பின்பு ஒளி­ப­ரப்­பப்­படும் இந்த வானொ­லியை படைப்­பது திரு பாலா­விற்கு புது­மை­யான அனு­ப­வ­மா­கவே இருக்­கிறது.

உட­னுக்­கு­டன் நேர­லை­யில் படைத்து பழ­கிய இவ­ருக்கு நேயர்­கள் கேட்­டுக்­கொண்­டி­ருப்­ப­து­போல் கற்­பனை செய்து நிகழ்ச்­சியை ஒலிப்­ப­திவு செய்­வது மாறு­பட்ட அனு­ப­வ­மாக உள்­ள­தாக கூறி­னார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற இவர், தொடர்ந்து தனது ஓய்வு காலங்­க­ளை­யும் வானொலி துறைக்கு அர்­ப்ப­ணிக்­கி­றார்.

வின்­டேஜ் ரேடி­யோ­வில் இசை 24 மணி­நே­ர­மும் ஒலி­ப­ரப்­பப்­படும். படைப்­பா­ளர்­கள் காலை 8 மணி முதல் நள்­ளி­ரவு வரை மட்­டுமே நிகழ்ச்­சி­களை வழங்­கு­வர்.

"தனி­மை­யில் இருக்­கும் முதி­ய­வர்­கள், பொழுதை எப்­படி கழிப்­பது என்று புரி­யாத முதி­ய­வர்­க­ளுக்கு இந்த வானொலி கண்­டிப்­பாக துணை­யாக இருக்­கும். நேயர்­க­ளு­டன் நேரடி தொடர்பு இல்லை என்­றா­லும், வானொ­லியைக் கேட்­கும் சிலர் எங்­க­ளது வாட்­ஸாப்­பிற்கு குறுந்­த­க­வல் அனுப்பி பாடல்­களை விரும்பிக் கேட்­பர். வின்­டேஜ் ரேடியோ தமிழ் நிகழ்ச்­சி­களில் நான் பாடல் வரி­க­ளின் நுணுக்­கங்­களை பற்­றி­யும் பொருளைப் பற்­றி­யும் நிறைய ஆராய்­வேன்.

"இப்­போது புதி­தாக பழைய இடங்­கள், குறிப்­பாக திரை­ய­ரங்­கங்­கள், அங்கு எந்­தெந்த ஆண்­டு­களில் என்­னென்ன படங்­கள் திரை­யி­டப்­பட்­டன, இடங்­க­ளின் வர­லாறு போன்­ற­வற்றை பற்­றிய சுவை­யான தொகுப்பை படைத்து வரு­கி­றேன்.

பழைய பாடல்­க­ளி­லும் படங்­க­ளி­லும் நாட்­டம் கொண்­ட­வர் இந்த வானொ­லியை கேட்­க­லாம்." என்­றார் வானொலி படைப்­பா­ள­ராக மட்­டும் அல்ல பாட­க­ரா­க­வும் வளம் வந்த திரு பாலா.

தொழில்­நுட்­பத்தை அதி­கம் பயன்­ப­டுத்­தத் தெரி­யா­த­வர்­கள் கூட எளி­மை­யாக பயன்­ப­டுத்­தும் விதத்­தில் இந்த வின்­டேஜ் ரேடியோ செயலி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. செய­லியை 'கூகல் பிளே' அல்­லது 'ஏப் ஸ்டோர்' வழியே பதி­வி­றக்­கம் செய்­ய­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!