பணியில் முன்னேற உதவும் புதிய கற்றல் பாதை

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

ஒவ்­வொரு நாளும் செய்­யும் வேலை­யில் பாடங்­க­ளை­யும் அவற்­றின் வழி புதிய திறன்­க­ளை­யும் பெற்று வரு­கி­றார் எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னத்­தின் ஊழி­ய­ரான திரு கா. பார்த்­தி­பன், 44. இம்­மா­தம் முதல் அப்­பா­டங்­களும் திறன்­களும் அவர் மேற்­கொள்­ள­வி­ருக்­கும் பட்­டப்படிப்­பின் ஓர் அங்­க­மா­க­வுள்­ளன.

வேலை­யில் பெறும் திறன்­ களைப் பட்­டப்­ப­டிப்­பின் ஒரு பகு­தி­யாக சேர்க்­கும் கற்­றல் பாதையை சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கம் (எஸ்ஐடி) அறி­மு­கம் செய்­துள்­ளது.

கழ­கம் தொடங்­க­வுள்ள புதிய பட்­டப்­ப­டிப்­பில் சேர்ந்­துள்ள திரு பார்த்­தி­பன், பணி­யி­டத்­தில் புதிய திறன்­க­ளைக் கற்று அதற்­காக பட்­டப்­ப­டிப்பு பாடங்­க­ளுக்­கான மதிப்­பெண்­க­ளைப் பெறு­வார்.

திறன் அடிப்­ப­டை­யி­லான வேலையிடக் கற்­றல் பாதை எனும் இப்புதிய திட்­டத்­தைச் செயல்­படுத்த போக்­கு­வ­ரத்து, தக­வல் தொடர்பு தொழில்­நுட்­பம் ஆகிய துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங் ­க­ளு­டன் கழ­கம் கடந்த மாதம் ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டது.

அதன்­படி, அத்­துறை நிறு­வ­னங்­க­ளின் ஊழி­யர்­கள் தங்­கள் துறை­யின் தொடர்­பில் சிங்­கப்­பூர் தொழில் நுட்­பக் கழ­கம் வழங்­கும் பட்­டப்படிப்பை மேற்­கொண்­டால், அவர்­க­ளது வேலை அனு­ப­வ­மும் ஏற்­கெ­னவே உள்ள திறன்­களும் பாடத்­திட்­டத்­தின் மதிப்­பீட்­டில் அங்­கீ­க­ரிக்­கப்­படும்.

பாடத்­திட்­டத்­தில் வேலை­யி­டக் கல்வி முக்­கிய இடம்­பி­டிக்­கும்.கூடு­தல் திறன் பெற வேண்­டி­ய­வர்­க­ளுக்கு வழக்­க­மான வகுப்­பு­கள் நடத்­தப்­படும். இணை­யம் வழி­யான வகுப்­பு­கள் வேலை செய்­யும் மாண­வர்­க­ளுக்கு நீக்­குப் போக்­கைத் தரும்.

இந்­தப் புதிய கற்­றல் பாதை நிறு­வ­னங்­க­ளின் பயிற்சி தேவை­ க­ளைப் பூர்த்தி செய்­கிறது. அதே நேரத்­தில் கற்­றலை மேம்­ப­டுத்த வேண்­டும் எனும் ஊழி­யர்­க­ளின் விருப்­ப­மும் நிறை­வே­று­கிறது.

அதன்­படி இந்த மாதத்­தி­லி­ருந்து, இரண்டு பட்­டப்­ப­டிப்­பு­கள் தொடங்­க­வுள்­ளன. முத­லா­வது, தக­வல், தொடர்பு தொழில்­நுட்­பம் (தக­வல் பாது­காப்பு) பொறி­யி யலில் இள­நி­லைப் பட்­ட­மா­கும்.

அத­னு­டன், நிலைத்­தன்­மை­யான உள்­கட்­ட­மைப்­புப் பொறி­யி­யல் (நிலம்) துறை­யில் இள­நிலை, முது­நி­லைப் பட்­டங்­களும் தொடங்­கப்­ப­டு­கின்­றன. இந்­தப் பட்­டப்­ப­டிப்­பு­களில் நிலப்­போக்கு வரத்து ஆணை­யம், எஸ்­பி­எஸ் டிரான்­சிட், எஸ்­எம்­ஆர்டி போன்ற ­வற்­றின் ஊழி­யர்­கள் பயி­ல­லாம்.

அந்த வாய்ப்­பைத்­தான் பயன் ­ப­டுத்­தி­யுள்­ளார் கடந்த 13 ஆண்டு­ க­ளாக எஸ்­எம்­ஆர்டி நிறுவனத்­தில் பணி­யாற்­றி­வ­ரும் திரு பார்த்­தி­பன். வாழ்­நாள் கல்­வி­யும் திறன் மேம்­பா­டும் இவ­ருக்­குப் புதி­தல்ல.

தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தின் சான்­றி­தழ் பெற்று எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னத்­தில் தொழில்­நுட்­ப­ராக சேர்ந்த இவர், பின்­னர் நன்­யாங் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் தக­வல்­தொ­ழில் நுட்ப பட்­ட­யக்­கல்­வியை பகுதி நேர­மாக பயின்று 2013ல் படிப்பை முடித்­தார்.

தற்­போது ரயில்­தட துணை பொறி­யி­யல் பரா­ம­ரிப்பு நிர்­வா­கி­யாகப் பணி­யாற்­றும் இவ­ரது திற­மையைக் கருத்­தில் கொண்டு, எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் இவ­ரது பகுதி ­நே­ரப் பட்­டப்­ப­டிப்­புக்­கான செலவை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

"சில விரி­வுரை வகுப்­பு­கள் முன்னதாகவே காணொளி வழி பதிவு­ செய்­யப்­பட்­டவை. அத­னால் வீட்­டி­லி­ருந்­த­வாறு கற்­கும் நீக்­குப்­போக்கு பிடித்­தி­ருக்­கிறது. வேலை­யில் தொடர்ந்து முன்­னேற்­றம் காண வேண்­டு­மா­னால் அதற்கு வாழ்­நாள் கற்­றலே சிறந்த வழி என்­பது அனு­ப­வம் சொல்­லித் தந்த பாடம்," என்று கூறி­னார் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான திரு பார்த்­தி­பன்.

பட்­டப்­ப­டிப்­புக்­குப் பின்­னர், ரயில்­தட பரா­ம­ரிப்­பின் மேம்­பாட்­டில் பங்­க­ளிக்க ஆவ­லாக இருப்­ப­தா­கக் கூறிய இவர், தேவைப்­பட்­டால் எதிர்­கா­லத்­தில் முது­நி­லைப் பட்­டத்தை மேற்­கொள்­ள­வும் தயா­ராக இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!